↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
தென் ஆப்பிரிக்க வேகப் பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் பாப் டூபிளஸ்ஸிஸ் ஆகியோர் பதட்டத்துடன் அயர்லாந்துடனான போட்டியில் ஆடவுள்ளனர். தென் ஆப்பிரி்க்காவில் இவர்களது வீடுகளுக்கு அருகே பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் ஏற்பட்டுள்ள பதட்டமே இதற்குக் காரணமாம். ஸ்டெயினுக்கு இன்று அயர்லாந்துடன் நடக்கும் போட்டி 100வது ஒரு நாள் போட்டியாகும். இந்த மகிழ்ச்சியில் இருந்து வரும் ஸ்டெயினுக்கு கேப்டவுனில் காட்டுத் தீ ஏற்பட்டிருப்பது கவலை அளித்துள்ளது. இந்த காட்டுத் தீவிபத்து ஏற்பட்டுள்ள இடம் இவரது வீட்டுக்கு பின்னால் உள்ளதாம். இதனால் ஸ்டெயின் கவலையில் மூழ்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்தில், கேப்டவுன், ஸ்டோன்ஹர்ஸ்ட் பகுதியில் எனது வீட்டுக்குப் பின்னால் காட்டுத் தீ. அனைவரும் பாதுகப்பாக இருங்கள். வன விலங்குகள் வெளியேறி வரலாம். கவனம் தேவை என்று கூறியுள்ளார்.
அதேபோல பாப் டூ பிளஸ்ஸிஸும் இதே கவலையை வெளியிட்டுள்ளார். அவர் விடுத்துள்ள டிவிட்டில் என்னோட புதிய வீட்டுக்கு அருகே காட்டுத் தீ பரவி வருகிறது. சீக்கிரமே தீயை அணைத்து விடுவார்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
முன்னதாக அயர்லாந்து போட்டி குறித்து செய்தியாளர்களிடம் ஸ்டெயின் பேசுவார் என்று அறிவி்க்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவருக்குப் பதில் பர்ஹான் பஹர்தீன் வந்து பேசினார். ஸ்டெயின் பதட்டமாக இருப்பதாக பேச்சு அடிபட்டது.
சில நாட்களுக்கு முன்புதான் காய்ச்சலில் விழுந்து எழுந்தார் ஸ்டெயின். பின்னர் நடந்த போட்டியில் இந்திய வீரர்கள் அவரது பந்து வீச்சை அடித்து நொறுக்கினர்.
அயர்லாந்து போட்டியின்போது ஸ்டெயினோ, டூபிளஸ்ஸிஸ்ஸோ காட்டுத் தீ குறித்த கவலையுடன் ஆட மாட்டார்கள், போட்டியை அனுபவித்து ஆடுவார்கள் என்று பஹர்தீன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு தனது முதல் ஒரு நாள் போட்டியில் ஆடினார் ஸ்டெயின். இதுவரை 99 ஒரு நாள் போட்டிகளில் அவர் 154 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 78 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 396 விக்கெட்களைச் சாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Home
»
sports
»
sports.tamil
» பதட்டத்தில் ஸ்டெயின், டூபிளஸ்ஸிஸ்.. கேப்டவுன் வீட்டுக்குப் பின்னால் காட்டுத் தீ!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment