↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
அறிமுக இயக்குனர் அனுசரண் இயக்கிவரும் "கிருமி" படத்தின் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இன்று சமூக வலைத்தளங்களில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறது.
மதயானைக்கூட்டம் படத்தில் நடித்த கதிர் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ரேஷ்மி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் இனிது இனிது' தேநீர் விடுதி, பர்மா ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தற்போது பாபிசிம்ஹாவுடன் உறுமீன், மற்றும் நட்பதிகாரம் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து ரேஷ்மி மேனன் கூறியபோது, 'இந்த படத்தில் தனக்கு மிகவும் கனமான வேடம் என்றும், தன்னால் இந்த வேடத்தை சிறப்பாக நடிக்க முடியுமா? என்ற சந்தேகம் தனக்கு ஏற்பட்டபோது, படக்குழுவினர் தனக்கு நம்பிக்கை கொடுத்து நடிக்க வைத்தனர் என்றும் கூரியுள்ளார்.
இது ஒரு சமூக பிரச்சனை குறித்த கதையோ அல்லது வைரஸ் போன்ற நோய்கள் குறித்த கதையோ அல்ல என்றும், சாதாரண இளைஞன் ஒருவனின் வாழ்க்கையில் ஏற்படும் சில திடீர் திருப்பங்கள் அவனை எப்படி மாற்றுகின்றன என்பது குறித்த கதை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பி.சி.ஸ்ரீராம் அவர்களின் உதவியாளர் அருள் வின்சென்D ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு கே' இசையமைக்கின்றார். இந்த படத்தை ஜேபிஆர் பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகின்றது.
Recent Posts
விஜய் படத்தை மிஸ் செய்த அஜீத் நாயகி
இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷண் பணிகள் [...]
தல56 ஆடியோ, வாங்கிய பிரபல நிறுவனம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..
அஜித் இன் அடுத்த படம் பற்றி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு காணப்பட்டு வருகிறது.. தல56[...]
“பாவாடை தாவணி கட்டத்தான் பிடிக்கும்” க்யூட்டாக பேசிய ஹன்சிகா!
ஜெயம்ரவி - ஹன்சிகா நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “ரோமியோ ஜூலியட்”. இமான் இசையில் அனிருத் பாடிய டண[...]
தமிழ்சினிமாவின் தேவதூதன் காக்காமுட்டை, பரவசப்படும் மூத்த இயக்குநர்.
விருது பெறும் படங்கள் வெகுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறாது என்கிற பொதுக்கருத்தை அடித்து நொறுக்கிவி[...]
நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து விஷால் வழக்கு
ஜூலை 15ம் தேதி தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் மீண்டும் சரத்குமார் போட்டி[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.