↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தை அடுத்து சந்தானம் ஹீரோவாக நடித்த படம் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'. இந்த படம் தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய மரியாதை ராமண்ணா' என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த படம் தற்போது மலையாளத்திலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. சந்தானம் நடித்த கேரக்டரில் திலீப்பும், ஆஷ்னா நடித்த வேடத்தில் பிசாசு நாயகி நிகில் கல்ராணியும் நடித்து வருகின்றனர்.

'இவன் மரியாதை ராமன்' என்ற பெயரில் உருவாகி வரும் இந்த படத்தை சுரேஷ் திவாகர் இயக்கி வருகிறார். கோபி சுந்தர் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்து வருகிறார். மார்ச் 5ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top