‘அமர்க்களம்’ படத்தில் காதலர்களாக நடித்த அஜித்-ஷாலினி ஜோடி, நிஜ வாழ்க்கையிலும் காதலித்து அமர்க்களமாக ஜோடி சேர்ந்தனர். கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அஜித்-ஷாலினி திருமணம் நடைபெற்றது. இருவரின் இல்லற வாழ்க்கையில் கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி, தம்பதியருக்கு அழகான பெண் குழந்தை அனோஷ்கா பிறந்தாள்.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஷாலினி மீண்டும் கர்ப்பமடைந்ததை தொடர்ந்து அஜித் குடும்பத்தினர், சினிமா உலகினர் மற்றும் ‘தல’ ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 4.25 மணிக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார் ஷாலினி. குழந்தையின் எடை 2 கிலோ 850 கிராம். முதல் பிரசவத்தை எப்படி அருகில் இருந்து பார்த்துக் கொண்டாரோ, அதே போல இந்த இரண்டாவது பிரசவத்தின் போதும் மனைவி அருகில் இருந்து ஆறுதலாக கவனித்துக் கொண்டார் அஜீத்.
நேற்று பிற்பகல் 2 மணிக்கு மருத்துவமனைக்கு அனுமதிக்காக வந்த அஜீத் ஷாலினி தம்பதியை மருத்துவமனையின் தலைவர் பிரதாப்ரெட்டி, மற்றும் அவரது மகள் ப்ரீத்தி ரெட்டி உள்ளிட்ட அனைவரும் வாசலில் நின்று வரவேற்றார்கள். இன்று அதிகாலையில் நடந்த மகப்பேறு சிகிச்சையை ‘செலிபிரட்டி டாக்டர்’ என்று வர்ணிக்கப்படும் டாக்டர் கொண்டம்மாள் கவனித்துக் கொண்டார்.
ரஜினி மகள் ஐஸ்வர்யா, விஜய் மனைவி சங்கீதா ஆகியோருக்கும் இவர்தான் மகப்பேறு மருத்துவர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.