↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உலகக்கிண்ணத்தில் சதம் அடித்த முதல் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை சர்ப்ராஸ் அகமது பெற்றுள்ளார்.
உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் லீக் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமது 101 ஓட்டங்கள் விளாசினார்.
உலகக்கிண்ண போட்டி வரலாற்றில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ஒருவர் சதம் விளாசியமை இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்பு 1999ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மொயின்கான் 63 ஓட்டங்கள் எடுத்ததே உலகக்கிண்ணத்தில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ஒருவரின் சிறந்த ஓட்டங்களாக இருந்தது.
* இந்த உலகக்கிண்ணத்தில் கலந்து கொண்ட 14 அணிகளில் ஆப்கானிஸ்தானை தவிர்த்து மற்ற அனைத்து அணிகளும் இப்போது சதத்தை பதிவு செய்து விட்டன.
* இந்த உலகக்கிண்ணத்தில் விக்கெட் கீப்பர் அடித்த 7வது சதம் இதுவாகும். ஒட்டுமொத்த உலகக்கிண்ண போட்டிகளில் விக்கெட் கீப்பர் மூலம் இதுவரை 15 சதங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் இலங்கை விக்கெட் கீப்பர் சங்கக்கராவின் பங்களிப்பு மட்டும் 5 சதமாகும்.
* அயர்லாந்து அணித்தலைவர் போர்ட்டர்பீல்டு 107 ஓட்டங்கள் எடுத்தார். உலகக்கிண்ணத்தில், டெஸ்ட் அந்தஸ்து பெறாத ஒரு அணியின் தலைவர் சதத்தை எட்டுவது இதுவே முதல்முறையாகும்.
* பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா- உல்-ஹக் காலால் ஸ்டம்பை மிதித்து ‘ஹிட் விக்கெட்’ முறையில் ஆட்டம் இழந்தார். உலகக்கிண்ண போட்டிகளில் ஒரு வீரர் ‘ஹிட் விக்கெட்’ ஆவது இது 9வது முறையாகும். இந்த உலகக்கிண்ணத்தில் இது 2-வது நிகழ்வாகும். ஏற்கனவே ஜிம்பாப்வேயின் சகப்வா, ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிராக இவ்வாறு ஆட்டமிழந்தனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top