↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அரையிறுதியில், இந்தியாவுடன், பாகிஸ்தான் மோத வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் மீண்டும் பட்டாசு பெட்டியுடன் மோக்கா.. மோக்கா பாட தயாராகிவருகின்றனர் இந்திய ரசிகர்கள். நடப்பு உலக கோப்பையில் முதலில் சறுக்கிய பாகிஸ்தான் அணி, அடுத்தடுத்து 4 போட்டிகளில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அதேநேரம், தொடக்கம் முதல் எந்த போட்டியிலும் தோல்வியே காணாத இந்தியாவும் முதல் ஆளாக காலிறுதிக்குள் சென்றுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் அணிகள், தங்களது முதல் லீக் ஆட்டத்தில், கடந்த மாதம் 15ம்தேதி மோதின. அதில் இந்தியா வெற்றி பெற்றது. உலக கோப்பையில் இதுவரை 6 முறை இவ்விரு அணிகளும் பலப் பரிட்சை நடத்தியிருந்தாலும், ஆறிலுமே இந்தியாதான் வெற்றி பெற்றுள்ளது. இதை கேலி செய்யும் வகையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மோக்கா.. மோக்கா என்ற பெயரிலான விளம்பர தொடரை வெளியிட்டது.

இந்நிலையில், இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் ஒருமுறை இதே உலக கோப்பையில் மோத வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


வரும் 19ம்தேதி (4வது) காலிறுதி போட்டியில் இந்தியாவும், வங்கதேசமும், மெல்போர்ன் மைதானத்தில் மல்லுகட்ட உள்ளன. தற்போதைய ஃபார்மை வைத்து பார்க்கும்போது, அப்போட்டியில், அநேகமாக இந்தியா வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20ம்தேதி, அடிலெய்டில், நடக்கும் காலிறுதியில் (2வது), ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் மோதுகின்றன.

ஐசிசி வெளியிட்டுள்ள புதிய பட்டியல்படி, இந்த மாறுபாடு நடந்துள்ளது. ஏனெனில், முன்பு 2வது காலிறுதியில் இந்தியாவும்-வங்கதேசமும் மோத உள்ளதாகவும், 4வது காலிறுதியில், நியூசிலாந்தும், குரூப் பி பிரிவில் தகுதி பெறும் அணியும் ஆடுவதாகவும் ஐசிசி அறிவித்தது. அதன்படி, அரையிறுதியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோத வாய்ப்பிருந்தது.


ஆனால், தற்போது வெளியிட்டுள்ள ஐசிசி பட்டியல்படி, 1வது காலிறுதி போட்டியில் நியூசிலாந்தும்-வெஸ்ட் இண்டீசும் மோதுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2வது காலிறுதியில் மோதவிருந்த இந்தியா-வங்கதேசத்தை 4வது காலிறுதியில் மோத உள்ளதாக அறிவித்துள்ளது. எனவே, ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் வீழ்த்தினால், இந்தியாவும், பாகிஸ்தானும், அரையிறுதியில் மோத வாய்ப்பு உருவாகும். 

ஐசிசி காலிறுதி பட்டியலை மாற்றினாலும்,, நாள் கணக்குப்படி பார்த்தால், இந்தியா ஆட உள்ளது 2வது காலிறுதிதான். 4வது காலிறுதியில் மோத உள்ளது நியூசிலாந்தும்-வெஸ்ட் இண்டீசும்தான். ஏனெனில் 19ம்தேதி, இந்தியா-வங்கதேசமும், 21ம்தேதி, நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீசும்தான் மோத உள்ளது. தேதிகளை பொறுத்தளவில் மாற்றமில்லை.

ஐசிசி திடீர், திடீரென இதுபோல காலிறுதி போட்டிகளை மாற்றம் செய்ய காரணம், ஆஸ்திரேலிய அணி, அந்த நாட்டு பிட்சுகளில் விளையாடுவதை உறுதி செய்வதே என்று கூறப்படுகிறது. உள்ளூர் ரசிகர்களை ஈர்ப்பதற்காக, இதுபோல ஐசிசி அங்குமிங்கும் தாவிவருவதாக கூறப்படுகிறது. அரையிறுதியில், இந்தியா-பாகிஸ்தான் அல்லது, இந்தியா-ஆஸ்திரேலியா மோதுவதைப் போலத்தான் ஐசிசி முதலில் பட்டியலை வெளியிட்டது. ஆனால் கடந்த வார இறுதியில் பட்டியலை மாற்றிய, ஐசிசி, மீண்டும், பழையபடியே திரும்பியுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top