சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை, கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து, கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, தமிழக எதிர்க்கட்சிகள் கூட்டாக எழுப்பியுள்ளன. கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆச்சார்யா, தீர்ப்பு குறித்து தெரிவித்த கருத்தை, இதற்கு ஆதாரமாக சுட்டிக்காட்டி உள்ளன. இந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்திற்கு செல்லும் தகுதி, வழக்கை நடத்திய அரசு என்ற முறையில், கர்நாடக காங்கிரஸ் அரசுக்கும், மனுதாரர்கள் என்ற அடிப்படையில், பா.ஜ., தலைவர் சுப்பிரமணியன் சாமி, தி.மு.க., பொது செயலர் அன்பழகன் ஆகியோருக்கும் உள்ளது.
இதில், கர்நாடக அரசு தரப்பில் செய்யப்படும் மேல்முறையீட்டுக்கு, சட்டரீதியாக அதிக முக்கியத்துவம் கிடைக்கும்; மற்ற இருவரும் இதை செய்தால், அதற்கு அரசியல் காழ்ப்புணர்வு என்ற சாயம் பூசப்படும் என்பதால், கர்நாடக அரசு களம் இறங்க வேண்டும் என, தமிழக எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கின்றன. தி.மு.க., தலைவர் கருணாநிதி, பா.ம.க., தலைவர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மார்க்சிஸ்ட் செயலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், உச்ச நீதிமன்றம் செல்லுமாறு கர்நாடக அரசை வலியுறுத்தி உள்ளனர்.இதுதொடர்பாக, கருணாநிதி, ராமதாஸ், இளங்கோவன் ஆகியோர், தங்களது அறிக்கையில், நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில், ஜெயலலிதாவின் வருமானக் கணக்கில் குளறுபடி உள்ளது என்றும், வங்கிகளில் அவர்கள் பெற்ற கடன் தொகையின் கூட்டுத் தொகை தவறு என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த தீர்ப்பு குறித்து, கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆச்சார்யா, 'இது இறுதி தீர்ப்பு அல்ல; உச்ச நீதிமன்றம் தான் இறுதி முடிவு எடுக்கும்' என, கூறியுள்ளதை, இந்த தலைவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். ஒட்டுமொத்தத்தில் மீண்டும் ஜெயாவுக்கு ஆப்புவைக்க பல தரப்பும் முயன்று வருகிறது. பாச்சா பலிக்குமா ? பொறுத்திருந்துதான் பார்கவேண்டும்.
0 comments:
Post a Comment