↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கி கதையின் நாயகனாக நடிக்கும் ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது.

இதில் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் பங்கேற்று பாடல்களை வெளியிட டைரக்டர் கே.வி.ஆனந்த் பெற்றுக் கொண்டார்.

விழாவில் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது:–

கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட பெரிய படங்கள் இயக்கியுள்ளேன். இப்படங்களை எடுப்பதற்கு எனக்கு முன்னோடியாக இருந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

அரசியல் படங்கள் எடுப்பதற்கு எங்களுக்கு பயமாக இருக்கிறது. அந்த துணிச்சல் இல்லை. ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகரன் பயப்படமாட்டார். அது போன்ற படங்களை தைரியமாக எடுப்பார். அவரது துணிச்சல் மற்ற இயக்குனர்களுக்கு இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை.

70 படங்கள் இயக்கி இருக்கிறார். இனிமேல் படங்கள் இயக்க மாட்டேன் என்று அறிவித்து இருக்கிறார். இது எங்களை வருத்தமடையச் செய்தது. எஸ்.ஏ.சந்திரசேகரன் டைரக்ஷன் செய்வதில் இருந்து விலக கூடாது.

மற்ற இயக்குனர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார். இயக்குனர் பணியை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும்.

‘டூரிங் டாக்கீஸ்’ படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. யதார்த்தமான கதை. அற்புதமாக நடித்து இருந்தார். அவரது தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் பாராட்டக்குரியது.

இவ்வாறு அவர் பேசினார்.

எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது டைரக்ஷன், தயாரிப்பு, விநியோகம் என சினிமாவில் எல்லா பணிகளையும் செய்து விட்டேன். இப்போது முதல் முறையாக நடிக்கவும் செய்துள்ளேன். ஒரு படத்தில் இரு கதைகளை சொல்லயுள்ளேன். ரசிகர்களுக்கு பிடிக்கும் என்றார்.

தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கலைப்புலி தாணு, செயலாளர்கள் டி.சிவா, ராதாகிருஷ்ணன், துணை தலைவர் தேனப்பன், பைவ் ஸ்டார் கதிரேசன் மற்றும் சத்ய ஜோதி தியாகராஜன், வி.சேகர், சித்ரா லட்சுமணன், கப்பார், பவித்ரன், சேவியர் பிரிட்டோ, நா.முத்துக்குமார், நளினி சுப்பையா, சவுந்தர், விஜய முரளி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.

தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் மேடையில் பாராட்டப்பட்டனர். விஜய் சங்கீதா, விமலா பிரிட்டோ ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர். பி.டி.செல்வகுமார் தொகுத்து வழங்கினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top