↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்திய கிரிக்கெட் அணியின் துணை அணித்தலைவர் கோஹ்லி எந்த நிலையில் இறங்கினாலும் சிறப்பாக செயல்படுவார் என்று விவ் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார்.
முத்தரப்பு ஒருநாள் தொடரில் 9, 5 ஓட்டங்கள் என தடுமாறி வரும் கோஹ்லியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர அவரை 3-ஆம் நிலையை விடுத்து, 4-ஆம் நிலையில் களமிறக்குவது குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதனை ஆதரித்த விவ் ரிச்சர்ட்ஸ் கூறுகையில், பவுன்ஸ் சற்று கூடுதலாக இருக்கும் அவுஸ்திரேலிய களத்தில் சில துடுப்பாட்டக்காரர்கள், குறிப்பாக முதல் 3 நிலையில் களமிறங்குபவர்கள் சோபிக்க முடியாமல் போக வாய்ப்புள்ளது.
அதனால் விராட் கோஹ்லியை 4-ஆம் நிலையில் இறக்குவதில் அர்த்தமிருப்பதாகவே கருதுகிறேன்.
4-ஆம் நிலையில் இறங்கும் போது சூழ்நிலைக்கு ஏற்ப அவர் தனது இன்னிங்ஸை சரியான பாதையில் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடினாலும், இலக்கைத் துரத்தினாலும் ஆட்டத்தின் போக்கைக் கணித்து அதற்கேற்ப தன் ஆட்டத்தை அமைத்துக்கொள்ள 4-ஆம் நிலை சிறந்தது என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top