
தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட கலைப்புலி எஸ்.தாணு, 565 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஏ.எல்.அழகப் பன் 127, ஹென்றி 21, மன்சூர் அலிகான் 29, ராஜேந்திரன் 4 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தனர்.தாணு அணி சார்பில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பி.எல்.தேனப்பன் 355, சுயேட்சையாகப் போட்டியிட்ட எஸ்.கதிரேசன் 484 வாக்குகள் பெற்று வெற்றிபெற்ற னர். ஏற்கனவே தாணு அணியைச் சேர்ந்த டி.சிவா, ஆர்.ராதாகிருஷ்ணன் இருவரும் செயலாளர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர். பொருளாளர் பதவிக்கு இதே அணி சார்பில் போட்டியிட்ட சத்யஜோதி டி.ஜி.தியாகராஜன், 621 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.21 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 73 பேர் போட்டியிட்டனர். அந்த ஓட்டுகள் தொடர்ந்து எண்ணப் பட்டு வருகிறது. இன்று அதன் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தேர்தல் அதிகாரியாகவும், தேர்தல் பார்வையாளராகவும் பணியாற்றினார். வாக்குப் பதிவு நடந்த கல்லூரியைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வெற்றிபெற்ற தாணு அணியினர் மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்து கொண்டாடினர். புதிய நிர்வாகிகள் இன்று பதவி ஏற்றுக்கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் 2015 முதல் 2017 வரை சங்கத்தை நிர்வகிப்பார்கள்.நிருபர்களிடம் தாணு கூறுகையில், ‘எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. வெற்றிபெறாதவர்களையும் அரவணைத்துச் சென்று, தயாரிப்பாளர் சங்கத்தை வெற்றிகரமாக வழிநடத்துவேன். தொடர்ந்து தயாரிப்பாளர்கள் நலன் காக்க பாடுபடுவேன்’ என்றார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.