↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
நடிகை அஞ்சலி பற்றி சமீபத்தில் பரபரப்பு செய்திகள் வெளியானது. ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு தோழிகளுடன் அவர் சென்றதாகவும், அங்கு ‘பப்பில்’ மது அருந்தி ரகளையில் ஈடுபட்டதாகவும் தன் மீது மோதிய ஒரு வாலிபரை அடிக்க பாய்ந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த செய்தி ஆந்திராவில் உள்ளூர் டி.வி. சேனல்களிலும் ஒளிபரப்பானது. தகவல் அறிந்து போலீசார் அந்த பப்புக்கு விரைந்தனர். அஞ்சலியை அவர்கள் எச்சரித்தார்களாம். இதற்கு அஞ்சலி பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–
என்னை பற்றி தவறாக வதந்திகள் பரவி உள்ளன. நான் வெளிநாட்டுக்கு சென்று படங்களில் பிசியாக நடித்து விட்டு இரு தினங்களுக்கு முன்புதான் ஐதராபாத் திரும்பினேன். இரவு 9 மணிக்கு நண்பர்கள் சிலருடன் ஓட்டலுக்கு சாப்பிட சென்றேன். அப்போது சில போட்டோ கிராபர்கள் என்னை சூழ்ந்து கொண்டு படம் எடுக்க வேண்டும் என்றார்கள். அவர்களிடம் தனிப்பட்ட முறையில் இங்கு வந்து இருக்கிறேன். சினிமா வேலையாக வரவில்லை. எனவே படம் எடுக்க வேண்டாம் என்று கூறி மறுத்தேன்.
அத்துடன் ஒரு வாலிபர் போதையில் தொந்தரவு செய்வது போன்றும் நடந்து கொண்டார். அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இது எப்படியோ போலீசுக்கு தெரிந்து போலீசாரும் வந்து விட்டனர். அவர்களிடம் நடந்த விஷயங்கள் சொல்லப்பட்டது. ஓட்டல் நிர்வாகத்தினர் என்னிடம் வருத்தம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் உள்ளூர் டி.வி.சேனலில் குடி போதையில் பப்பில் நான் ரகளை செய்ததாக செய்திகள் வெளியிட்டுள்ளனர். நான் மது குடித்ததாக வந்த செய்தி தவறானது. எனக்கு மது குடிக்கும் பழக்கம் இல்லை. பாய் பிரண்டுடன் சுற்றும் பழக்கமும் கிடையாது. என் மீது வேண்டுமென்றே தவறான நோக்கத்தில் இந்த செய்தியை பரப்பி உள்ளனர். அந்த பப்பின் சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தால் உண்மை தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.