↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


 2001ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதோடு ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் 'லகான்'. இந்த படத்தில் அமீர்கான் ஜோடியாக கிரேசி சிங் நடித்திருந்தார். இந்நிலையில் கிரேசி சிங் தற்போது மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுக்கு அம்மாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கொரட்டாலா சிவா இயக்கத்தில் மகேஷ்பாபு-ஸ்ருதிஹாசன் நடித்து வரும் திரைப்படத்தில் மகேஷ்பாபுவின் மிக முக்கியமான அம்மா கேரக்டரில் நடிக்க பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் தற்போது கிரேசி சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே பல தெலுங்கு படங்களில் ஹீரோயினியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர்   'மிர்ச்சி' திரைப்படத்தில் பிரபாஸுக்கு அம்மாவாக பிரபல நடிகை நதியாவை நடிக்க வைத்த கொரட்டாலா சிவா, தற்போது மீண்டும் ஒரு புகழ்பெற்ற நடிகையை தெலுங்கு படவுலகிற்கு அம்மாவாக அறிமுகப்படுத்தவுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top