↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இயக்குனர் ஹரியின் அண்ணன் காலமானார் - Cineulagam



தமிழ்சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான டைரக்டர் ஹரியின் சகோதரர் வி.ஏ.ஜி கார் வண்ணராஜா(43) இன்று அதிகாலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
ஹரியின் சகோதரர் வி.ஏ.ஜி கார் வண்ண ராஜா ரியல் எஸ்டேட் துறையில் பணி செய்து வந்தார். சிறிது காலம் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று உடல்நிலை மோசமடையவே சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் சிகிச்சை பலனின்று இன்று அதிகாலை மருத்துவமனையில் காலமானார்.
வி.ஏ.ஜி கார் வண்ணராஜாவின் உடல் நாளை காலை 10 மணிக்கு சென்னை, போரூர் மின்சார மையானத்தில் தகனம் செய்யப்படுகிறது. இவரின் மறைவு செய்தி கேட்ட திரையுலகினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top