↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
படத்திற்கு படம் அதிரடி சண்டைக் காட்சிகளில் நடித்து தன் ரசிகர்களை குஷிப்படுத்துவது அஜித்தின் வழக்கம். அதுவும் டூப் சண்டை நடிகரை பயன்படுத்தாமல் தானே ரிஸ்க் எடுத்து சண்டைக் காட்சியில் நடிப்பார். அப்படி ஒரு முறை ‘ஆரம்பம்’ படத்தில் கார் சண்டைக் காட்சியின்போது டூப் போடாமல் தானே துணிந்து நடித்தபோது அவருக்கு காலில் அடிபட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக காலில் ஆபரேஷன் செய்தாக வேண்டும் என்று சொன்னாலும் அதைப் பொருட்படுத்தாமல் ஆரம்பத்தில் நடித்து, படத்தை முடித்துக் கொடுத்தார்.
பிறகும் உடனடியாக ‘வீரம்’, ‘என்னை அறிந்தால்’ படங்களின் படப்பிடிப்பு தொடங்கவிருந்ததால் ஆபரேஷனை தள்ளிப் போட்டார். ஆனால் தற்போதும் அவர் ஆபரேஷன் செய்துகொள்ளவில்லையாம். ‘வீரம்’ வெற்றியை கொடுத்த சிவாவின் இயக்கத்தில் தற்போது நடிக்கவுள்ளார். அடுத்த வருடம் ‘என்னை அறிந்தால்’, ‘சிவா’ படம் என ரசிகர்களுக்கு இரட்டை விருந்து தர முடிவு செய்திருந்தார் அஜித்.

எனவே படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கினால்தான் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடியும். எனவே ஆபரேஷன் செய்துகொண்டால் நான்கைந்து மாதங்கள் ஓய்விலிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால் இம்முறையும் அவர் ஆபரேஷனை தள்ளி வைத்துவிட்டாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top