கவர்ச்சியினாலும் அழகினாலும், பல இளைஞர்களின் மனதை கட்டிப்போட்ட பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு அவரது கணவர் சாண்டா டேனியல் வெப்பர் அழகான கார் ஒன்றினை கிருஸ்துமஸ் பரிசாக அளித்திருக்கிறாராம். இதனை பெருமிதத்தோடு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வெள்ளை நிற அந்த பி.எம்.டபிள்யூ காரை பரிசளித்த கணவருக்கு நன்றி கூறியுள்ள லியோன், கிருஸ்துமஸ் நாளில் நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன் என்றார். பாலிவுட்டின் ஜிஸ்ம் 2 படத்தில் அறிமுகமானவர் சன்னிலியோன். கனடாவில் போர்ன் படங்களில் நடித்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்தார். அவரை பாலிவுட் உலகமே அரவணைத்துக் கொண்டது.
கோலிவுட்டிலும் வடகறி என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். தெலுங்கிலும் இப்போது நடித்து வருகிறார் சன்னிலியோன். 2014ஆம் ஆண்டில் இணையத்தில் பிரதமர் மோடியை விட அதிகம் தேடப்பட்ட நபராக புகழ் பெற்றுள்ள சன்னிலியோனை அவரது கணவர் அடிக்கடி கார் பரிசளித்து திக்கு முக்காடச் செய்கிறார். கடந்த 2011ஆம் ஆண்டே டேனியல் வெப்பர் என்பவருடன் சன்னிலியோனுக்கு திருமணமாகிவிட்டது.
பாலிவுட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட சன்னிலியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மெசார்டி காரை பரிசளித்தார். கருப்பு நிறமுள்ள அழகான ஆடம்பரமான அந்த காரை பார்த்து அசந்து போனாராம். இப்போது கிருஸ்துமஸ் பரிசாக வெள்ளை நிற பி.எம்.டபிள்யூ காரை பரிசளித்துள்ளார் சன்னியின் கணவர் டேனியல். கிடைச்சா சன்னிலியோனுக்கு கிடைச்ச மாதிரி கணவர் கிடைக்கணும் என்று பொறாமைபடுகின்றனர் பாலிவுட் உலகில்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.