↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சவுதியில் வாகனம் ஓட்டிய இரண்டு பெண்களின் வழக்கு தீவிரவாத வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டவது தடைசெய்யப்பட்டது. அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவதில்லை.
ஆனால் அதையும் மீறி வாகனம் ஓட்டிச் செல்லும் பெண்களை கைது செய்து அபராதம் விதிப்பதை அந்நாட்டினர் கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் லுஜையின் ஹத்லௌல் (Loujain al-Hathloul), மைஸ்ஸா அலமௌதி (Maysa al-Amoudi) என்ற இரு பெண்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வாகனத்தை ஓட்டிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
இதில் மைஸ்ஸா அலமௌதி என்னும் மற்ற பெண்ணோ, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் சவுதி பத்திரிகையாளர்.
அவர் ஹத்லௌல் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க எல்லைப்பகுதிக்கு வந்தபோது கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இப்பெண்களின் நெருக்கமானவர்கள் கூறுகையில், இந்த இரண்டு பெண்கள் மீதும் தடையை மீறி வாகனம் ஓட்டியதற்காக வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் இணையதளம் மூலமாக தெரிவித்தக் கருத்துக்களுக்காகவே வழக்கை எதிர்கொள்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் உலகளவில் பெண்கள் வாகனங்களை ஓட்டுவதை தடுக்கும் ஒரே நாடு சவுதி அரேபியா என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top