நடிகை திரிஷா திருமணம் குறித்து நாளுக்கு நாள் ஒரு தகவல் வருகிறது. இந்நிலையில் ஜெயம் ரவி, சுராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் திரிஷா தான் ஹீரோயினாம். இப்படத்தில் பிரபுவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படக்குழுவிற்கு பிரபு தன் வீட்டில் இருந்து விருந்து வைக்க, திரிஷா அதை சாப்பிட்டுவிட்ட டுவிட்டரில் பகிர்ந்தார். சிறிது நேரம் கழித்து திரிஷாவிடம் பேசிய பிரபு, பதிலுக்கு நீ கல்யாண விருந்து எப்போ போடுவ. சீக்கிரமே போடும்மா என்று திரிஷாவை பார்த்து தமாஷ் செய்தாராம். பிரபு நடிக்கும் படத்தின் சூட்டிங் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்தால் அவரது வீட்டில் இருந்து வகைவகையான உணவு படப்பிடிப்பு தளத்துக்கே வந்துவிடும். அன்றைக்கு யூனிட்டில் உள்ள ஸ்டார்கள் எல்லோருக்கும் அங்குதான் விருந்து நடக்கும்.
சமீபத்தில் ‘அப்பாடக்கர்’ படப்பிடிப்பு நடந்தது. ஜெயம் ரவி, பிரபு, திரிஷா பங்கேற்ற காட்சிகளை இயக்குனர் சுராஜ் படமாக்கினார். பிரபு வீட்டிலிருந்து மதிய உணவு அடுக்கு கேரியரில் வந்தது.
சிக்கன், மட்டன், நண்டு, எறா என வகைவகையான டிஷ்கள் கமகமத்தன. மதிய உணவு இடைவேளை நேரம் வந்ததும் பிரபு வீட்டு விருந்துதான் அங்கு நடந்தது. வாழை இலை விரித்து அதில் வகைவகையான வெஜ், நான் வெஜ் ஐயிட்டங்கள் வரிசையாக
விருந்து சாப்பிட்ட உடனே திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தை திறந்து விருந்து சாப்பிட்டதை ஊருக்கே அறிவித்துவிட்டார். ‘சிவாஜி வீட்டிலிருந்து மதிய உணவு… இல்லை.. இல்லை.. விருந்து. ஸ்ஸ்ஸ்… என்ன சுவை. இப்போது நினைத்தாலும் நாவில் எச்சில் ஊறுகிறது. தேங்க்ஸ் பிரபு சார்’என மெசேஜ் போட்டுவிட்டார்.
இதைப்பார்த்த பிரபு, ‘பதிலுக்கு நீ கல்யாண விருந்து எப்போ போடுவ. சீக்கிரமே போடுமா’ என்று திரிஷாவை பார்த்து தமாஷ் செய்தாராம்.
பொது இடத்தில் பட யூனிட்டார் முன்பு பிரபு இப்படி சொன்னதால் திரிஷாவுக்கு தர்மசங்கடமாகிவிட்டதாம். ஆனால் அதை வெளிக்காட்டாமல் புன்னகைத்தபடி சென்றுவிட்டாராம்.
0 comments:
Post a Comment