பிரபல புகைப்படத்துறை நிறுவனமான கோடக் (Kodak) நிறுவனம் 2015-ஆம் ஆண்டு தனது முதல் ஆண்ட்ராய்ட் மொபைலை அறிமுகப்படுத்தவுள்ளது.
புகைப்படக் கருவிகள், உபகரணங்கள் விற்பனையில் சிறந்து விளங்கிய கோடக் நிறுவனம் 2012-ஆம் ஆண்டு நொடிந்துப் போகும் நிலைக்கு தள்ளப்பட்டது. அப்போதிலிருந்து மேலெழுந்து வருவதற்கு சிரமப்பட்ட அந்நிறுவனம் தற்போது புல்லிட் க்ரூப் (Bullitt Group) நிறுவனத்துடன் இணைந்து ஆண்ட்ராய்ட் மொபைல்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
புல்லிட் க்ரூப் நிறுவனம் ஏற்கனவே Cat Phones வரிசை ஆண்ட்ராய்ட் மொபைல்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள CES 2015 தொழில்நுட்ப பொருட்காட்சியில் முதல் ஆண்ட்ராய்ட் மொபைலை அறிமுகம் செய்யவுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.