↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக ‘டார்லிங்’, ‘பென்சில்’ படங்களில் நடித்து வருகிறார். டார்லிங் படத்தில் நிக்கில் பராணி உடனும், ‘பென்சில்’ படத்தில் ஸ்ரீதிவ்யாவுடனும் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இவ்விரு படங்களும் இறுதி கட்ட பணிகளில் இருக்கின்றன.

இப்படங்களுக்கு பிறகு ‘திரிஷா இல்லைன்னா நயன்தாரா’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதை புதுமுக இயக்குனர் அட்டிக் டைரக்டு செய்கிறார். தற்போது அடுத்த படத்திலும் நடிக்க தயாராகிவிட்டார். இதில் இவருக்கு ஜோடியாக தெகிடி படத்தில் நடித்த ஜனனி ஐயர் நடிக்கவுள்ளார். 

இப்படத்தை அறிமுக இயக்குனர் பவன் ராஜாகோபால் இயக்கவுள்ளார். ஷாலோம் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது. ஜி.வி.பிரகாஷே இசையமைக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய முழுவிவரங்களை விரைவில் வெளியிட உள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top