ஆசிய கிண்ணப் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதிய ஒரு ஒருநாள் போட்டி மிரட்டலாக இருந்தது.
கடந்த 2010ம் ஆண்டு ஆசிய கிண்ணப் போட்டியில் இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டி தம்புள்ள மைதானத்தில் நடந்தது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும், பின்னர் வந்தவர்களின் அதிரடி ஆட்டத்தால் இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 242 ஓட்டங்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ஜெயவர்த்தனே (54), மேத்யூஸ் (55) அரைச்சதம் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில், அக்தர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
243 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்கமே மோசமாக இருந்தது. அனைவரும் ஓர் இலக்க ஓட்டங்களில் நடையை கட்டினர்.
மேத்யூஸ் பந்து வீச்சில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டம் சரிந்தது. பின்னர் உமர் அக்மல் பொறுமையான ஆட்டம் ஆட, மறுமுனையில் அணித்தலைவர் அப்ரிடி அதிரடியில் மிரட்ட ஆரம்பித்தார்.
இதன் காரணமாக அப்ரிடி 7 சிக்சர், 8 பவுண்டரி என விளாசி சதம் எடுத்தார். இவர் இந்தப் போட்டியில் 76 பந்துகளில் 109 ஓட்டங்கள் குவித்தார்.
பின்னர் வந்தவர்கள் மலிங்காவின் வேகத்தில் நடையை கட்ட அணி 47 ஓவரில் 226 ஓட்டங்கள் எடுத்திருந்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.
இலங்கை தரப்பில், மலிங்கா தனது மிரட்டல் வேகத்தால் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சதம் விளாசிய பாகிஸ்தான் அணித்தலைவர் அப்ரிடி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
|
மறக்க முடியுமா: மிரட்டிய அப்ரிடி- கலங்க வைத்த மலிங்கா (வீடியோ இணைப்பு)
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.