↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad தனுஷ், அம்ரியா தஸ்தூர் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அனேகன்' திரைப்படத்தின் டிரைலர் ஜனவரி முதல் வாரத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படம் ஜனவரி 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே டங்காமாரி பாடல் உள்பட அனேகன் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் தனுஷ் ரசிகர்கள் அனேகன் படத்தின் டிரைலரை மிகவும் எதிர்பார்த்து வருகின்றனர். வேலையில்லா பட்டதாரி' படத்திற்கு பின்னர் வரும் தனுஷ் படம் என்பதால் அந்த படத்தை விட அனேகனை பெரும் வெற்றிப்படமாக்க வேண்டும் என்ற முனைப்பில் அவரது ரசிகர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

தனுஷ், அம்ரியா தஸ்தூர், கார்த்திக், ஆஷிஷ் வித்யார்த்தி, அதுல் குல்கர்னி,தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்திருக்கும் அனேகன் படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top