↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad அமீர்கான், அனுஷ்கா சர்மா நடித்த பிகே திரைப்படம் மதப்பிரச்சனைகளையும் தாண்டி உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கின்றது. இந்த படம் சாதாரண ரசிகன் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை மெய்ப்பிக்கும் வகையில் இளையதளபதி விஜய் நேற்று தனது குடும்பத்துடன் சென்னை சத்யம் சினிமாவில் 'பிகே' திரைப்படத்தை பார்த்துள்ளார். ஏற்கனவே அமீர்கான் நடித்த '3 இடியட்ஸ்' படத்தின் ரீமேக்கில் விஜய் நடித்த 'நண்பன்' சூப்பர் ஹிட் படங்களின் வரிசையில் ஒன்றாக சேர்ந்தது. அந்த வகையில் 'பிகே' படத்தின் ரீமேக்கிலும் விஜய் நடிப்பாரா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் பிகே படத்தின் பிசினஸ் ஆறே நாட்களில் ரூ.155 கோடியை தொட்டுவிட்டது. இந்த படத்தின் ஒருவார வசூல் "தூம் 3" படத்தின் ஒரு வார வசூலை முந்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்துமஸ் தினத்தில் 4 தமிழ் புதுப்படங்கள் ரிலீஸான போதிலும் சென்னையில் அனைத்து தியேட்டர்களிலும் பிகே ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top