↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad அஜீத் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கியுள்ள 'என்னை அறிந்தால்' படத்தில் பாடல்கள் டிராக் வெளியாகியுள்ளதை அனைவரும் அறிவோம். கடந்த 2008ஆம் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த வாரணம் ஆயிரம் படத்திற்கு பின்னர் ஹாரீஸ் ஜெயராஜுடன் கவுதம் மேனன்  மீண்டும் இணைந்துள்ள திரைப்படம்'என்னை அறிந்தால் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி மின்னலே முதல் வாரணம் ஆயிரம் படம் வரை கவுதம் மேனனின் அனைத்து படங்களிலும் ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் தாமரைதான் எழுதிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 6 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் கவுதம் மேனன்+ஹாரிஸ் ஜெயராஜ்+தாமரை கூட்டணி மீண்டும் அஜீத் படத்தில்தான் இணைந்துள்ளது.

அஜீத், த்ரிஷா, அனுஷ்கா, அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். வரும் பொங்கல் தினத்தில் இந்த படம் உலகம் முழுவதும் மிகவும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top