இந்த வலிகளில் மிகவும் கொடுமையானது உறுப்புகளுக்கிடையே ஏற்படும் வலி தான்.
குறிப்பாக தோள்கள், முழங்கைகள், முழங்கால்கள், இடுப்பு மற்றும் மணிக்கட்டுகள் ஆகியவற்றில் இந்த வலிகள் ஏற்படும்.
இதனை சரிசெய்ய சில எளிய வழிமுறைகளை கடைப்பிடித்தாலே போதுமானது.

வலிகளை விரட்ட சூப்பர் டிப்ஸ்
காந்த சிகிச்சை
எலும்பு தொடர்பான வலிகளுக்கு காந்த சிகிச்சை மிகவும் சிறந்தது.
எனவே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டால் நல்லது.

நல்லா தண்ணி குடிங்க
உடலில் நீர்ச்சத்து மிகவும் குறைந்து இருக்கும் போது தான் பெரும்பாலும் எலும்பு தொடர்பான வலிகள் ஏற்படுகின்றன.
ஆதலால் எப்போதும் அதிகளவில் நீர் குடிப்பது உடல் உறுப்புகளுக்கு நல்லது.

சரியா படுக்கணும்
வேவ்வேறு நிலைகளில் நிற்பது, நடப்பது, உட்காருவது, படுப்பது ஆகியவையும் வலிகளை அதிகரிக்கின்றது.
எனவே இவற்றை தவிர்ப்பதால் உடம்பில் வலிகள் குறையும்.

ஹை ஹீல்ஸ் வேண்டாம்
ஹை ஹீல்ஸ் மற்றும் பொருந்தாத காலணிகள் அணிவதால் கால்களில் வலி ஏற்படும்.
எனவே சரியான காலணிகளைத் தெரிவு செய்து அணிய வேண்டும்.

கால்சியம் உணவுகளை சாப்பிடுங்க
40 வயதுக்கு மேல் மாதவிடாய் சுழற்சிகள் நின்றதும், பல பெண்களுக்கு எலும்புகளில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்படக்கூடும்.
எனவே கால்சியம் அதிகமுள்ள பால், முட்டை போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வது அவர்களுக்கு அவசியமாகும்.

ஆலிவ் ஆயில் மசாஜ்
தோள்கள், முழங்கைகள், முழங்கால்கள், இடுப்பு மற்றும் மணிக்கட்டுகள் ஆகியவற்றில் அதிக வலி ஏற்படும் வாய்ப்புக்கள் இருப்பதால், அவற்றை ஆலிவ் எண்ணெய் கொண்டு அடிக்கடி மெதுவாக மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.
மசாஜ் செய்யும் போது, இதயம் இருக்குமிடத்தை நோக்கி உடம்பை அழுத்தி விடுவது நல்லது.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.