தாஜ்மகாலுக்கு தங்க முலாம் பூச நினைக்கிற மாதிரி சில விஷயங்கள் அபூர்வமாக நடக்கும் சினிமாவில். படத்திற்கு இன்னும் இன்னும் என்று வெயிட் ஏற்றிக் கொண்டே போவார்கள். அப்படிதான் விஜய் சேதுபதி நடிக்கும் ‘நானும் ரவுடிதான்’ படத்திற்கான வெயிட்டையும் ஏற்றிக் கொண்டே போகிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். கடந்த சில படங்களாகவே விஜய் சேதுபதிக்கு இறங்குமுகம். இந்த நேரத்தில் அவரது படத்தின் வியாபாரத்தை மேலும் மேலும் கூட்ட வேண்டும் என்றால் மேலும் மேலும் விஷயங்களை கொட்டினால்தான் உண்டு.
முதல் அட்ராக்ஷன் நயன்தாரா. ‘நானும் ரவுடிதான்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி அவர்தான். அதற்கப்புறம்? இங்குதான் தனுஷின் மூளை தாறுமாறாக வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது. இதே படத்தில் சிவகார்த்திகேயனை ஒரு பாடலுக்கு ஆடவிட்டால் எப்படியிருக்கும்? உடனே அவரிடம் பேசினாராம். தனது சுக்கிர திசையே தனுஷால்தான் துவங்கியது என்பதை நன்றாக புரிந்து வைத்திருந்த அவரும், ‘ஓக்கே’ என்றாராம் எவ்வித மறுப்பும் சொல்லாமல்.
தனது தொழில் முறை எதிரி என்று விஜய்சேதுபதி நினைப்பது சிவகார்த்திகேயனைதான். இப்போது தனுஷே இப்படியொரு ஐடியாவை சொல்லும்போது அதை மறுக்க முடியாமல் தவிக்கிறாராம் இவர். அந்த ஒரு பாடலில் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஆடப்போவது தனுஷும், நயன்தாராவும் கூட!
ரிலீஸ் நேரத்தில் தியேட்டர்ல டிக்கெட் பறக்காஸ்! வேற வழியே இல்ல!!
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.