↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தவிர்க்க முடியாத சில காரணங்களால் பலமுறை தள்ளிப்போன அஜித், கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணி தற்போது இணைந்த ‘என்னை அறிந்தால்’ படம் ஒருவழியாக பொங்கல் தினத்தன்று ரிலீசாகி ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்து தர தயாராக இருக்கிறது. இதில் அனுஷ்காவும், த்ரிஷாவும் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிலிருந்து, அஜித்தின் விதவிதமான கெட்டப்கள், டீசர், ‘அதாரு உதாரு’ பாடல் என எல்லாவற்றையும் அஜித்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகினறனர்.
இந்நிலையில் வரும் கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25ஆம் நாள் அன்று அஜித் தன் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து கொடுக்க வேண்டும் என நினைத்துள்ளாராம். அது என்னவாக இருக்கும் என்று கேள்விப்பட்டதில் கிடைத்த தகவலானது ‘என்னை அறிந்தால்’ படத்தின் ட்ரைலரை கிறிஸ்துமஸ் அன்று வெளியிடலாம் என்று அஜித் முடிவு எடுத்திருக்கிறாராம்.
தல ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் கேக்கை விட இனிப்பான விருந்து இதுதான்.
yennai-arindhaal-second-poster-first-look

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top