↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சென்னை: தமிழில் தொடர்ந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று நடிகை சோனாக்ஷி சின்ஹா தெரிவித்தார்.ரஜினிகாந்த் ஜோடியாக ‘லிங்கா’ படத்தில் நடித்தவர் இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா. அவர் கூறியதாவது:‘லிங்கா’ படத்தில் எனது கேரக்டர் நான் இதற்கு முன் நடித்திராதது. அந்தப் படம் எனக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுத்தது. 

அந்த படத்தின் கேரக்டர், கெட்டப், மொழி எல்லாமே எனக்கு புதிதாக இருந்தது. ரஜினி அருமையான நடிகர். அதையும் தாண்டி நல்ல மனிதர். அவருடன் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். அவர் ஒவ்வொருவரையும் மதிக்கும் விதத்தைக் கண்டு வியந்தேன். 

தன்னைப் பார்க்க வரும் ஒவ்வொரு ரசிகரையும் எதிர்கொண்டு அவர் பேசிப்பழகும் விதம் ஆச்சரியமாக இருந்தது. ‘லிங்கா’ மூலம் தமிழில் எனக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்துள்ளது. தொடர்ந்து நல்ல கதைகள் கிடைத்தால் கண்டிப்பாக தமிழில் நடிப்பேன். இவ்வாறு சோனாக்ஷி சின்ஹா சொன்னார். 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top