↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதா யாரையும் சந்திக்க மறுப்பதற்கான காரணங்கள் தெரிய வந்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 27ம் தேதி ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சிறையில் அடைத்த மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை ஜெயலலிதாவின் ஆலோசகரான ஷீலா பாலகிருஷ்ணன் பெங்களூருக்கு சென்றார். ஆனால் அவரை சந்திக்க ஜெயலலிதா மறுத்துவிட்டார். மேலும் அன்றைய தினம் பெங்களூரில் இருந்த ஓ. பன்னீர் செல்வத்தையும் ஜெயலலிதா சந்திக்க மறுத்துவிட்டார். இதையடுத்து அன்று மதியம் சென்னை சென்ற பன்னீர் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 29ம் தேதி பதவியேற்ற கையோடு பன்னீர் பெங்களூர் வந்தார்.
29ம் தேதி இரவு ஹோட்டலில் தங்கிய முதல்வர் பன்னீர் செல்வம் மறுநாள் அதாவது 30ம் தேதி ஜெயலலிதாவை சந்திக்க சிறைக்கு சென்றார். ஆனால் அவரை சந்திக்க முடியாமல் போனதால் அன்று மாலையே அவர் சென்னைக்கு சென்றுவிட்டார்.
இப்படி ஜெயலலிதா யாரையும் சந்திக்க விருப்பம் இல்லை என்று கூறுவதற்கு காரணங்கள் உள்ளதாம்.
சிறையில் ஜெயலலிதா தங்கியிருப்பது தரை தளத்தில். அவர் பார்வையாளர்கள் அறைக்கு வர வேண்டும் என்றால் ஒரு கிலோ மீட்டர் நடக்க வேண்டுமாம். முழங்கால் வலியால் அவதிப்படும் ஜெயலலிதாவால் ஒரு கிலோ மீட்டர் நடந்து வர இயலாது என்பதால் அவர் யாரையும் சந்திக்க மறுக்கிறாராம்.
முதல்வராக இருக்கையில் ஜெயலலிதா வெகு சிம்பிளாக உடையணிந்தாலும் கம்பீரமாக காட்சியளிப்பார். ஆனால் சிறையில் இருக்கும் அவர் இந்த தோற்றத்தில் தன்னை யாரும் பார்ப்பதை விரும்பவில்லை என்று கருதுவதாகத் தெரிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment