இதுவரை ரசிகர் மன்றத்தினர் என்ன செய்கிறார்கள், எப்படி தமது பட ரிலீஸ் நாளில் அவ்வளவு செல்வு செய்கிறார்கள் என்பதில் எல்லாம் அவ்வளவாக அக்கறை காண்பிக்காத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இப்போது ரசிகர் மன்றங்களை சீரமைக்க உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.
சூப்பார் ஸ்டார் என்று தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வரும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்த்து ஏமாந்து நின்றதுதான் கடைசியில் மிச்சமானது.ஆனால், இப்போது ரசிகர்கள் சுர்ரென்று விழித்துக்கொள்வது போல, தமிழகத்தில் உள்ள ரசிகர் மன்றங்களை சீரமைக்கக் வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகளுக்கு திடீர் உத்தரவுப் பிறப்பித்துள்ளார் ரஜினிகாந்த். மேலும், கடந்த 10 ஆண்டுகளாக பெரிய அளவில் செயல்படாமல் இருக்கும் ரசிகர் மன்றங்களின் விவரங்களையும் ரஜினி
கேட்டுள்ளாராம். அதோடு மாநிலங்கள் ரீதியாகவும் ரசிகர் மன்றங்கள் அமைப்பதுக் குறித்தும், ஏற்கனவே ரசிகர் மன்றங்கள் இருப்பது, அவைகளின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கேட்டுள்ளாராம். அதோடு மாநிலங்கள் ரீதியாகவும் ரசிகர் மன்றங்கள் அமைப்பதுக் குறித்தும், ஏற்கனவே ரசிகர் மன்றங்கள் இருப்பது, அவைகளின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர் மன்றங்களை சீரமைத்து புதிதாக ரசிகர்களை இணைக்கவும் ரஜினிகாந்த் உத்தரவுப் பிறப்பித்துள்ளாராம். கடந்த வாரம் நவராத்திரியின்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ரஜினிகாந்த் மனைவியை சந்தித்ததும், டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா ரஜினிகாந்தை சந்தித்து வரவிருக்கும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினிகாந்தை முதல்வர்
வேட்பாளராக நிறுத்த வாக்குறுதியும் அளித்துள்ளதால்தான் இந்த விரைவான செயல்பாடுகள் ரஜினி தரப்பில் அரங்கேறி வருகிறது என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
வேட்பாளராக நிறுத்த வாக்குறுதியும் அளித்துள்ளதால்தான் இந்த விரைவான செயல்பாடுகள் ரஜினி தரப்பில் அரங்கேறி வருகிறது என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment