↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் குடும்பத்தின் ரூ742 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கப் பிரிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய தொழிலதிபர் சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனத்துக்கு தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்து மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு அதன் பங்குகளை விற்க செய்தார். அதனைத் தொடர்ந்து ஏர்செல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் உரிமத்தை தயாநிதி ஒதுக்கீடு செய்தார். இதற்கு ஆதாயமாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் டைரக்ட் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ629 கோடி முதலீடு செய்தது என்கிறது சிபிஐ குற்றப்பத்திரிகை.
மொத்தம் ரூ742 கோடி ரூபாயை தயாநிதி மாறனும் அவரது குடும்பத்தினரும் வெளிநாட்டில் இருந்து பல்வேறு வழிகள் மூலம் ஆதாயமாக பெற்றனர் என்று குற்றம்சாட்டியுள்ளது சிபிஐ குற்றப்பத்திரிகை. இந்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் தயாநிதி, அவரது சகோதரர் கலாநிதி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது தொடர்பான விசாரணை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அமலாக்கப்பிரிவும் தற்போது களத்தில் இறங்கியுள்ளது. தயாநிதி மாறனும் அவரது சகோதரர்களும் சட்டவிரோதமாக அன்னிய செலாவணி மோசடி மூலம் ரூ742 கோடியை பெற்றுள்ளதால் இந்த பிரிவின் கீழும் விரைவில் வழக்கு தொடர அமலாக்கப் பிரிவு முடிவு செய்துள்ளது.
மேலும் சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டபடியான சட்டவிரோதமாக தயாநிதி மாறனும் அவரது சகோதரர்களும் பெற்ற ரூ742 கோடிக்கு சமமான அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்யவும் அமலாக்கப் பிரிவு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக தயாநிதி மாறன் குடும்பத்தினரின் பண பரிவர்த்தனைகள் குறித்து விவரங்களைத் தருமாறு மொரீஷியஸ் மற்றும் மலேசியா நாடுகளுக்கு அமலாக்கப்பிரிவு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே சிபிஐ விசாரணைக்கு இந்த நாடுகள் ஒத்துழைப்பு தராத நிலையில் அமலாக்கப் பிரிவும் கடிதம் அனுப்பி வைத்துள்ளது. பொதுவாக ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ ஒரு பக்கம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தாலும் இதில் அன்னிய செலாவணி மோசடிகள் நடைபெற்றுள்ளதா என்பதை ஆராய்ந்து அமலாக்கப் பிரிவும் தனி வழக்குப் பதிவு செய்து வருகிறது.
அன்னிய செலாவணி மோசடி பிரிவின் கீழ் அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்து அந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுவதுடன் அவர்களது சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும். இதனடிப்படையில் ஸ்பெக்ட்ரம் வழக்குகளில் சட்டவிரோத பண பரிமாற்றத்துக்காக ரூ14 ஆயிரம் கோடிக்கான சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நோட்டீஸை அமலாக்கப் பிரிவு அனுப்பியுள்ளது. இது தொடர்பாக 10 தனிநபர்கள் மற்றும் 9 நிறுவனங்கள் மீது அமலாக்கப் பிரிவு வழக்கும் பதிவு செய்துள்ளது.
ஏற்கெனவே கலைஞர் டிவிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் சட்டவிரோதமாக அன்னிய செலாவணி விதிகளை மீறி ரூ223 கோடி கொடுத்தது தொடர்பாக, அந்த டிவி நிறுவனத்துக்கு சொந்தமான ரூ223 கோடி சொத்துகளை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Home
»
news
»
news.india
» ஏர்செல் வழக்கு:தயாநிதி மாறன் குடும்பத்தின் ரூ742 கோடி சொத்துகளை பறிமுதல் செய்கிறது அமலாக்கப் பிரிவு
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment