ரஷ்யாவில் மூதாட்டி ஒருவர் ரயில் கதவில் சிக்கியபடி பயணித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரஷ்ய தலைநகர் மொஸ்கோ (Moscow) அருகே உள்ள டிமிட்ரோவ்ஸ்கயா (Dmitrovskaya) என்ற ரயில் நிலையத்தில் இலோனா சுகுபின (Ilona Shubina Age-61) என்ற மூதாட்டி ரயிலில் இருந்து இறங்க முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாரதவிதமாக தன்னியக்க கதவு பூட்டிக்கொண்டதால் அந்த பெண்ணின் தலை மட்டும் சிக்கி வெளியே நீட்டிக் கொண்டிருந்துள்ளது.
இந்நிலையில் அந்த பெண்ணின் இக்கட்டான நிலையை அடுத்த ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்ததுடன், உடனடியாக ரயில்வே அதிகாரிகளிடம் கூறி அந்த பெண்ணை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கழுத்துப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.