விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கத்தி' திரைப்படம் வரும் தீபாவளி திருநாளில் ரிலீஸ் ஆகும் என அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் அந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் இந்த தேதி மாற்றம் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத்தான் கொடுத்துள்ளது. ஏனெனில் 'கத்தி' திரைப்படத்தை தீபாவளிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அதாவது அக்டோபர் 17ஆம் தேதி ரிலீஸ் செய்யவேண்டும் என தியேட்டர் அதிபர்கள் தயாரிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் அக்டோபர் 27ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்குமாறு கொடுத்த மனுமீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரயிருப்பதால் அதற்கு முன்பே பத்து நாள் வசூலை எடுத்துவிட வேண்டும் என தியேட்டர் அதிபர்கள் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
தீபாவளிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை ரிலீஸானால் மொத்தமாக பத்து நாட்கள் நல்ல வசூலாகும் என்று தியேட்டர் அதிபர்கள் கூறிய தகவலை அடுத்து அக்டோபர் 17ஆம் தேதிக்கு ரிலீஸ் தேதியை மாற்றலாமா? என்பது குறித்து தயாரிப்பு தரப்பு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே வரும் வெள்ளிக்கிழமை சென்சார் அதிகாரிகள் கத்தி' திரைப்படத்தை பார்த்து சான்றிதழ் வழங்க உள்ளனர்.
விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இரண்டாவது முறை இணைந்துள்ள 'கத்தி' திரைப்படத்திற்கு அனிருத் முதல்முறையாக இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளிக்கு முன்பே விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு திரைவிருந்து வைக்கவுள்ளதால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

0 comments:
Post a Comment