இளைஞர்களின் நாடி நரம்புகளையெல்லாம் சுண்டிவிட்டு போகக்கூடிய சர்வதேச காய கல்பம் ஒன்று உண்டென்றால் அது ‘ப்ளே பாய்’ இதழ்தான்! கடந்த பல்லாண்டுகளாக ஏறுமுகத்திலிருக்கும் இந்த இதழின் அட்டை படத்தில் அம்மணமாக போஸ் கொடுக்க அடித்துப்பிடித்துக் கொண்டு நிற்கிறார்கள் உலகின் முன்னணி நடிகைகள் பலர். (நம்ம ஊரு அசின் கூட ஒரு தடவ போஸ் கொடுத்தாரு தெரியும்ல? என்று புரளியை கிளப்பியவர்களும் உண்டு) இந்த நடிகைகளை அழைத்துக் கொண்டு உலகம் முழுவதுமிருக்கும் நல்ல நல்ல லொகேஷன்களில் படமெடுப்பார்களாம். இதற்காகவே பல லட்சங்களை செலவு செய்கிறது இந்த பத்திரிகை. உலகின் தலைசிறந்த போட்டோகிராபர்களை மட்டுமே இந்த ஸ்டில் செஷனுக்கு பயன்படுத்துகிறது பிளேபாய்! அப்படியொரு முன்னணி புகைப்பட கலைஞர்கள் லிஸ்ட்டில் இடம் பெற்றிருக்கிறார் தமிழ்நாட்டை சேர்ந்த எல்.ராமச்சந்திரன்.
ஏதோ பொம்பளை புள்ளைகளை நிற்க வச்சு அம்மணமா படமெடுக்கிற விஷயம்தானே என்று அலட்சியமாக கூறிவிட முடியாது இந்த வேலையை பொறுத்தமட்டில்! ஆபாசம் துளி கூட இருக்கக் கூடாது. அந்த அம்மணத்திலும் ஒரு அழகும் கலையுணர்ச்சியும் இருக்க வேண்டும் என்றெல்லாம் பல்வேறு நிபந்தனைகள் இருக்கிறதாம் இவர்களுக்கு.
பிரபல நடிகைகள் நமீதா, டாப்ஸி உட்பட பலரையும் விதவிதமான கோணங்களில் தன் கேமராவால் படம்பிடித்தவர் எல்.ராமச்சந்திரன். இந்தியாவின் முன்னணி மாடல்கள் பலரையும் விளம்பரங்கள், பேஷன் நிகழ்ச்சிகளுக்காக படமெடுத்திருக்கிறார். இவர் எடுத்த புகைப்படங்கள் பல முன்னணி இதழ்களின் அட்டைகளை அலங்கரித்துள்ளன.
பல்வேறு போராட்டங்களைத் தாண்டி முதல் முறையாக ப்ளேபாய் பத்திரிகையின் அட்டைகளில் ஒரு தமிழ்ப் புகைப்பட கலைஞர் எடுத்த படங்கள் இடம்பெற்று உலக அளவில் சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை அத்தனை சுலபத்தில் ராமச்சந்திரனுக்கு சாத்தியமாகிவிடவில்லை. இதற்காக அமெரிக்கா சென்று ப்ளேபாய் பத்திரிகை நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டார். அங்கு ப்ளேபாய் பத்திரிகையைச் சேர்ந்த திரு.ஜர்மோ போஜனிமி, திரு.கேரிகோல், திரு.அலெக்ஸ் பிராவின்கார் ஆகியோரைச் சந்தித்தார். ராமச்சந்திரன் எடுத்த படங்கள் அவரது பின்னணியை பார்த்து, அவருக்கு ஒரு போட்டி வைத்தனர். அதில் வெற்றிகரமாக தேறியபிறகு கிரீஸ் நாட்டில் உள்ள சாண்டோரினி என்ற இடத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
அதன்பிறகு லாஸ் ஏஞ்சல்ஸ்சில் உள்ள ப்ளேபாய் அலுவலகத்தில் இருந்து ராமச்சந்திரனுக்கு அழைப்பு வந்தது. இப்போது ப்ளேபாய் பத்திரிகையின் இரண்டு இதழ்களின் அட்டைகளில் ராமச்சந்திரன் எடுத்த புகைப்படங்கள் இடம்பெற்று சாதனைப் படைத்துள்ளன. இதைத் தொடர்ந்து லண்டன், மயாமி, உக்ரெயின், க்ரீஸ் மற்றும் ஆசிய நாடுகளின் ப்ளேபாய் பதிப்புகள், ஆப்ரிக்க ப்ளேபாய் பதிப்புகள், ஐரோப்பிய நாடுகளின் ப்ளேபாய் பதிப்புகளின் அட்டைகளில் நம்ம ஊர் ராமச்சந்திரன் எடுத்த புகைப்படங்கள் தான் இனி அலங்கரிக்க இருக்கின்றன.
உலகின் முன்னணி மாடல்களான Kata Rina Bencek, Jaciya Swedberg, Jade Amber Williams, Taryn Walker, Ralitsa Ivanova போன்ற மயாமி, துருக்கி, லாஸ் ஏஞ்சல்ஸ், சண்டோரினி, இங்கிலாந்து, பாங்காக், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பல்வேறு ரம்மியமான இடங்களில் வைத்து படமெடுத்துள்ளார் ராமச்சந்திரன. இப்படி உலகமெங்கும் உள்ள பிரபல அழகிகளை படமெடுக்கும் ராமச்சந்திரனின் சொந்த ஊர் நம்ம ஊர் கும்பகோணம்.
கும்பகோணத்தில் பிறந்து ‘கும்பத்தையும்‘ அதன் ‘கோணத்தையும்’ படமெடுத்துக் கொண்டிருக்கிறார் ராமச்சந்திரன். என்ன பொருத்தம் இப்பொருத்தம்?
0 comments:
Post a Comment