ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள சென்ற வீரர்களில் ஏழு பேரை காணவில்லை என்று புகார் கூறப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் உள்ள இன்சியானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர்கள் சென்றனர்.
இந்நிலையில் நேபாள நாட்டை சேர்ந்த மூன்று வீரர்களும், இலங்கையை சேர்ந்த இரண்டு வீரர்களும், வங்கதேசம் மற்றும் பாலஸ்தீன நாட்டை சேர்ந்த தலா ஒரு வீரரும் காணாமல் போனதாக இன்சியான் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர். காணாமல் போன வீரர்கள் அனைவரும் அங்குள்ள இடைத்தரகர்கள் உதவியின் மூலம் தென் கொரியாவில் தங்களுக்கு வேலை தேடி சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
வரும் அக்டோபர் 19ம் திகதியுடன் வீரர்களின் விசா காலம் முடிவடைவதால் அதன் பிறகு அவர்கள் அங்கு தங்கினால் அது சட்டவிரோதமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment