ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் பொதுமக்கள் வாழும் இடங்களிலும், பாதுகாப்பு படையினரின் நிலைகள் மீதும் பாகிஸ்தான் படை தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இவ்வாறு தாக்குதல் நடத்தி வருவதால் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பதிலடி கொடுக்க படையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
நேற்று பாதுகாப்பு மந்திரி அருண் ஜெட்லியை முப்படை தளபதிகள் சந்தித்து பேசியுள்ள நிலையில், இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை பாகிஸ்தான் ஒட்டுமொத்தமாக நிறுத்தும் வரை பேச்சுவார்த்தையையும் ரத்து செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தரப்பு கொடி சந்திப்புக்கு நேற்று அழைப்பு விடுத்தபோது இந்தியா அதை நிராகரித்துள்ளது.
நேற்றிரவு கூட பாகிஸ்தான் தரப்பு தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்திய தரப்பிலும் பாகிஸ்தானின் 73 நிலைகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் கடந்த சில தினங்களில் மட்டும் எல்லையோரம் வசித்த மக்கள் 20000 பேர் இடம்பெயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment