சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 15 நாட்களாக பெங்களூரு பார்ப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை பார்க்க, அவரது கட்சியை சேர்ந்த நடிகைகள்வந்திருந்தார்கள்.
ஜாமீன் வழக்கில் ஆஜராகும் வக்கீல்கள் குழுவை தவிர சிறையில் ஜெயலலிதா இதுவரை யாரையும் சந்தித்து பேசவில்லை. வழக்கம்போல், இன்று வந்திருந்த நடிகைகள் சரஸ்வதி, குயிலி, பாத்திமா பாபு, வாசுகி உள்ளிட்டோரும் சிறை வாசலில் சிறிது நேரம் இருந்துவிட்டு திரும்பி சென்றனர்.
தமிழக அமைச்சர்கள் பழனியப்பன், முக்கூர் சுப்பிரமணியன், சம்பத், ஜெயபால் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் மட்டுமே சிறை கட்டிடத்தின் முன்பகுதி வரை செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அ.தி.மு.க. தொண்டர்கள் ஒசரோடு சந்திப்பிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். அச்சந்திப்பில் இரும்பு தடுப்பு வேலி போடப்பட்டு, போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
சிறையில் உள்ள ஜெயலலிதாவை பார்க்க வருகிறவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதால் பாதுகாப்பில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு உள்ளது.
0 comments:
Post a Comment