அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிவரும் அஜீத்தின் 55ஆவது திரைப்படத்தின் பணிகள் ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டன.
பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டு உள்ள இந்த படத்தின் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ‘சத்யா’, ‘ஆயிரம் தோட்டாக்கள்’ உள்ளிட்ட 5 பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், இவற்றில் ஒரு பெயர் இறுதி செய்யப்பட்டு, தீபாவளிக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டு விடும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அஜீத்தின் 56ஆவது படம் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கி உள்ளன. இதை ‘வீரம்’ படத்தை இயக்கிய சிறுத்தை சிவா இயக்க உள்ளார். இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
ஏற்கனவே அஜீத் நடித்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தாலும், அதில் அஜீத்துக்கு ஜோடியாக அவர் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்பாஸை காதலித்துவிட்டு, மம்முட்டியை மணக்கும் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.
சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தற்போது நடந்துவருவதாகவும், பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிகிறது.
0 comments:
Post a Comment