ஹஜ் புனித யாத்திரையின் போது தங்களை தாங்களே புகைப்படும் எடுத்துக் கொள்வதற்கு இணையதளத்தில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
சவுதியின் மெக்காவில் உள்ள காபாவை சுற்றியும், அங்கு நடைபெறும் பல்வேறு மத சம்பிரதாய நிகழ்வுகளையும் புனித யாத்திரைக்கு வரும் மக்கள் தங்களுடன் சேர்த்து செல்பியாக எடுத்துக்கொண்டுள்ளனர்.
மேலும் செல்பி எடுத்த அந்த புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருவதால், ஹஜ் செல்பிகள் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளது.
இதுகுறித்து செல்பி எடுத்த அலி என்ற நபர் கூறுகையில், இது எனது முதல் புனித யாத்திரை என்றும் இப்பகுதியில் என்னைச் சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் ஆவணப்படுத்துவது மிகவும் முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஹஜ் பயணத்தில் செல்பிகள் எடுப்பதை சிலர் இணையதளத்தில் வரவேற்றாலும், அதற்கு கடுமையாக விமர்சனம் செய்து பலரும் டுவிட்டர் தளத்தில் தங்களது கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.