கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் ஜனாதிபதி தேர்தல் கமிட்டியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் கமிட்டி ரணிலை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது என தீர்மானித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 23ம் திகதி தேர்தல் கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியில் இருபது உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். எதிhவரும் ஜனாதிபதி தேர்தலை எவ்வாறு நடாத்துவது என்பது குறித்து நேற்று சிறிகொத்தவில் வைத்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. தேர்தல் கொள்கை, வேறு கட்சிகளின் ஆதரவினைப் பெற்றுக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. கட்சியின் ஏனைய உறுப்பினர்களிடம் தேர்தல் தொடர்பிலான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:
Post a Comment