↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
தமிழ் சினிமா இந்த ஆண்டு புதிய எண்ணிக்கையைத் தொடும் என்று தெரிகிறது. வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 200-ஐத் தாண்டும் என்கிறார்கள், படங்கள் வெளியாகும் வேகத்தைக் கவனித்து வருபவர்கள். வரும் அக்டோபர் 10-ம் தேதி மட்டுமே 10 படங்கள் வெளியாவதாக அறிவிப்புகள் வந்துள்ளன, அதுவும் தியேட்டர் பட்டியலுடன்.
அப்படி வெளியாகும் படங்கள்:
ஆலமரம், குபீர், ஜமாய், குறை ஒன்றுமில்லை, முயல், நீ நான் நிழல், பண்டுவம், புளிப்பு இனிப்பு, வெண்ணிலா வீடு, யாவும் வசப்படும் என பத்து படங்கள்.
இவற்றில் யாவும் வசப்படும், வெண்ணிலா வீடு, ஆலமரம் போன்ற படங்களுக்கு பத்திரிகையாளர் காட்சிகளும் அறிவித்துவிட்டார்கள். தமிழ் சினிமாவில் இதுவரை எந்த நாளிலும் 10 படங்கள் சேர்ந்தாற்போல வெளியானதில்லை. தீபாவளி, பொங்கலுக்குக் கூட இப்படி படங்கள் வெளியானதைப் பார்த்ததில்லை. இந்தப் படங்களில் பெரும்பாலானவை மல்டிப்ளெக்ஸ்களில் ஒரு காட்சிதான் பெற்றிருக்கின்றன. ஒற்றைத் திரை அரங்குகளிலும் இதே நிலைதான். சில ஒற்றை அரங்குகளில் மூன்று படங்கள் வெளியாகின்றன, கிட்டத்தட்ட காட்சிக்கு ஒன்றுவீதம்! இன்னும் சில படங்கள் சென்னையில் மட்டும் வெளியாகின்றன. வெளியூர்களில் வேறொரு நாளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர் அதன் தயாரிப்பாளர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment