அன்பார்ந்த வாசகர்களே! "இந்து மதத்தை இழிவுபடுத்துபவர்கள் யார்?" என்ற தலைப்பில் ஒரு சிறு கட்டுரையை எழுத எண்ணம் தோன்றியது, காரணம் தமிழ் நாட்டில் ஃபாஸிச வெறி பிடித்த காவிக்கூட்டமான "இந்து முன்னனி" அமைப்பைச்சார்ந்தவர்கள் சமீபகாலமாக பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் முக்கியமாக இவர்கள் எடுத்துக்கொண்ட ஒரு போராட்டம் தான் "இந்து மதத்தை இழிவுபடுத்துபவர்களை எதிர்த்து போராட்டம்" என்ற ஒன்று. உண்மையில் யார் இந்து மதத்தை இழிவுபடுத்துகிறார்கள்? என்பதை விளக்குவதற்காகத்தான் இதை எழுதுகிறேன். இதனை படிக்கும் இந்து மதத்தை பின்பற்றக்கூடிய நண்பர்கள் யாராக இருந்தாலும் சற்று சிந்திக்க வேண்டுகிறேன்.
இந்து மதம் ஒரு பழைமையான மத வழிபாடு என்பது அனைவரும் அறிந்ததே! நமது இந்திய திரு நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே அதாவது கிறிஸ்தவ மதமும், இஸ்லாமிய மதமும் இந்த நாட்டிற்குள் நுழைவதற்கு முன்னாலேயே இந்து மதம் தான் இந்த இந்திய நாட்டில் இருந்து வந்தது என்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
பல தெய்வ கொள்கையை ஏற்றுக்கொண்டு, பகவத்கீதை, ரிக், யஜூர், சாம, அதர்வன வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் போன்றவற்றை புனித நூலாக ஏற்றுக்கொண்ட மக்களைத்தான் இந்துக்கள் என்று அழைக்கின்றோம். நம்முடைய தலைப்பிற்குச் செல்வதற்கு முன்னால் "இந்து" என்ற வார்த்தை எவ்வாறு புழக்கத்திற்கு வந்தது என்பதை நாம் சற்று ஆராய வேண்டும். மேலே குறிப்பிட்ட எந்த ஒரு வேத நூல்களிலும் "இந்து" என்ற வார்த்தையை நம்மால் காண இயலாது, காரணம் "இந்து" என்ற சொல் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டதில்லை. அரேபியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னால் "இந்து" என்ற வார்த்தை புழக்கத்திலேயே இல்லை.
0 comments:
Post a Comment