↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
முன்பெல்லாம் படம் வெளியிடுவதற்கு முன்னர் டிரைலர் மற்றும் பாடல் வெளியீடு என இரண்டு மட்டும்தான் வரும். ஆனால் தற்போது முதலில் பர்ஸ்ட் லுக் என புகைப்படங்களை வெளியிடுகின்றனர். பின்னர் இரண்டாவது வெளிவரும் டீஸர். மூன்றாவதாக டிரைலர். அதன்பின்னர் கடைசியாக பாடல் வெளியீடு. இதில் டீஸர், மற்றும் டிரைலர் ஆகியவைகளை யூடியூபில் பார்த்தவர்கள் எண்ணிக்கையை வைத்து ஒரு விளம்பரமும், அதற்கு ஒரு விழாவும் எடுத்து பயங்கர பில்டப் கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் டிரைலர் வெற்றிவிழா என்று அஞ்சான் படத்துக்காக அந்த படத்தின் தயாரிப்பாளர் கொண்டாடியது நினைவிருக்கலாம்.
இந்நிலையில் தற்போது புதியதாக இன்னொரு டிரண்ட் ஆரம்பித்துள்ளது. அதுதான் ஆண்ட்ராய்டு கேம் என்னும் விளையாட்டு. பிரபல படங்களின் பெயர்களில் ஆண்ட்ராய்டு கேம் ஒன்றை தயார் செய்து அதிலும் வருமான பார்க்க தொடங்கிவிட்டனர். கோச்சடையான் படத்தில் இருந்துதான் இந்த ஆண்ட்ராய்டு கேம் ஆரம்பமானது. அதன்பின்னர் சைவம், அஞ்சான் மற்றும் தற்போது கத்தி போன்ற படங்களுக்கு இந்த ஆண்ட்ராய்டு கேம் வெளியாகியுள்ளது.
ஆனால் கோலிவுட்டில் தற்போது ஒரு புதிய செண்டிமெண்ட் புரளியை கிளப்பி விடுகின்றனர். இதுவரை ஆண்ட்ராய்டு கேம் வெளிவந்த படங்கள் எதுவுமே ஓடவில்லை. அனைத்துமே பெயிலியர் என்பதுதான் அந்த செண்டிமெண்ட். கோச்சடையான், சைவம், அஞ்சான் வரிசையில் கத்திக்கும் அந்த நிலைமை வந்துவிடுமோ என்ற பேச்சுதான் தற்போது கோலிவுட்டை ஆட்டுவித்து வருகிறது. இந்த செண்டிமெண்ட் குறித்து கேள்விப்பட்டவுடன் கத்தி படக்குழுவினர் கலக்கத்தில் உள்ளனர்.
Home
»
cinema
»
cinema.tamil
»
vijay
» ஆண்ட்ராய்டு கேம் வரும் படங்களுக்கு ஆப்பு. அதிர்ச்சியில் கத்தி படக்குழுவினர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment