தலயின் 55-வது படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் இப்போதுதான் மெல்ல மெல்ல படத்தைப் பற்றி மௌனம் கலைய ஆரம்பித்திருக்கிறார்.
இதுவரை சொல்லப்பட்ட படத்தின் லைனை இன்றைக்கு வெளியாகியிருக்கும் புகைப்படங்கள் மெல்ல உடைப்பது போலிருக்கின்றன. அதாவது இதுவரை படத்தின் வில்லன் அருண்விஜய் என்றார்கள். அவரும் கௌதம் பட வில்லன்கள் பாணியிலேயே வித்தியாசமாக நீளமான தலைமுடி வைத்து மிரட்டியிருந்தார்.
ஆனால், இன்றைக்கு வெளீயான புகைபடத்தில் ‘தல’யும், அருண்விஜய்யும் சாமானியர்கள் போல் சைக்கிள் கடை வாசலில் உட்கார்ந்து இருக்கிறார்கள். ஆக, இருவரும் நண்பர்கள் என்பது உறுதியாகியிருக்கிறது. (பின்னால் இதே நண்பன் வில்லனாவாரோ..?)
ஆனால், இதில் கவனிக்கத்தக்க விஷய்ம் அஜித்தின் கெட்டப். இதுவரை நாம் பார்க்காத புதிய கெட்டப்பிலிருக்கிறார் அஜித். அது அவர் ரசிகர்களுக்கு ஆனந்தத்தையும், படம் பார்க்கத்தூண்டும் ஆவலையும் அதிகமாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதற்கிடையில் இன்று அளித்துள்ள பேட்டி ஒன்றில் “இன்னும் கிளைமாக்ஸை நான் முடிவு செய்யவில்லை…” என்றிருக்கிறார் கௌதம் மேனன். அது அவரது ‘இயக்குநர் கெத்’தாக இருக்கலாம். ஆனால், டைட்டிலையாவது சீக்கிரம் முடிவு செய்யலாமே..?
இயக்குநர் ஏரியாவில் ‘தல’தலையிட மாட்டார் என்பது உண்மைதான். அந்த பெருந்தன்மைக்காக, தலைப்பு, கிளைமாக்ஸ் உள்ளிட்டு எல்லா விஷயங்களிலும் மௌனம் காக்கலாமா மிஸ்டர். மேனன்..?
படத்தில் ‘தல’ யின் அசத்தலான புகைப்பட கேலரி காண, கீழே இருக்கும் ‘லிங்க்’கை ‘க்ளிக்’ செய்து பாருங்கள்…
0 comments:
Post a Comment