மேற்கிந்திய தீவுகள் வீரர்களின் போராட்டத்தால் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் தொடருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்திய புதிய ஊதிய ஒப்பந்த முறைக்கு வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்தியாவுடனான தொடரை புறக்கணிக்கப் போவதாக கூறியிருந்தனர்.
ஆனால் முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கி விளையாடினர். இருப்பினும் இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டாவிட்டால் உரிய நடவடிக்கையில் இறங்குவோம் என அணித்தலைவர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.
இதனால் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் தொடருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதுபற்றி இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறுகையில், இந்தியா– மேற்கிந்திய தீவுகள் இடையிலான கிரிக்கெட் போட்டி தொடருக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும்.
இது தொடர்பாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் சிலருடன் பேசினேன். இந்த போட்டி தொடருக்கு எந்தவித இடையூறும் இருக்காது என்று அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.
மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் நல்லவர்கள். அவர்கள் தங்கள் பணியை நன்கு உணர்ந்து இருக்கிறார்கள்.
கொச்சி ஒருநாள் போட்டிக்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கோ, அல்லது மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்துக்கோ நாங்கள் பணம் எதுவும் கொடுக்கவில்லை. அப்படி சொல்லப்படுவதில் உண்மை எதுவும் கிடையாது. அது ஒரு வதந்தியாகும் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment