↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஜெயலலிதாவை ஜாமீனில் வெளியில் கொண்டுவர இன்னும் இரு வழிகள் தான் உள்ளன. ஜெயலலிதா ஜாமீன் மனுவை ஹைகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இதன்பிறகு பெயர் தெரிவிக்க விரும்பாத அதிமுக தரப்பு வக்கீல் ஒருவர் கூறியதாவது: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இன்னும் எங்களுக்கு இரு வாய்ப்புகள் உள்ளன. உச்சநீதிமன்றத்துக்கு போவது மட்டுமே ஒரு வாய்ப்பு என்று கூறப்படும் கருத்து உண்மையில்லை. நேற்று கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தனிநபர் பெஞ்ச்தான் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. எனவே கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இரு நபர் பெஞ்ச் முன்பாக மீண்டும் ஜாமீன் கோரிக்கையை வைக்க முடியும்.
அதே நேரம் நாங்கள் எந்த கோர்ட்டுக்கு செல்வது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றார். இன்று வால்மீகி ஜெயந்தியையொட்டி கர்நாடக ஹைகோர்ட்டுக்கு விடுமுறை. எனவே தீர்ப்பு காப்பி நாளைதான் அதிமுக தரப்புக்கு கிடைக்க உள்ளது. அதன்பிறகே கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதா அல்லது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போகிறார்களா என்பது தெரியவரும். அதேநேரத்தில் அடுத்தடுத்து நீதிமன்றங்களை அணுகி ஜாமீன் கோரி எல்லா வழிகளும் அடைபட்டுவிட்டால் நிலைமை மோசமாகும் என்பதால் கொஞ்சம் ஆறப்போட்டு அடுத்துமேல்முறையீடு செய்யலாம் என்றும் மூத்த வழக்கறிஞர்கள் ஜெயலலிதா தரப்புக்கு அறிவுரை வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment