↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு வரவேற்க்கத்தக்கது என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். பெங்களூரு சிறையில் உள்ள ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். சென்னை, கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசினார்.
அப்போது அவர், ''சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது. முதல்வராக இருந்தவர், சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற கேவலம், தமிழகத்தில் தான் நடந்துள்ளது. தமிழகத்தில் நடந்த இச்சம்பவத்தை பார்த்து, உலகமே சிரிக்கிறது. ஜெயலலிதா சிறைக்குப் போனதால், அமைச்சர்கள் அழுது கொண்டே பதவி ஏற்றனர். தலைவி தான் வேண்டும் என்றால், அவர்கள், பதவியை வேண்டாம் என்று கூறியிருக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.கவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், இந்த போராட்டங்களை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஏன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை?. மாவட்டத்துக்கு மாவட்டம் தேவையில்லாமல் 144 தடை உத்தரவு போட்டவர்கள். இப்போது தமிழகத்தில் நடக்கும் சம்பவங்களை தடுக்க ஏன் 144 தடை உத்தரவு போடவில்லை. இன்றைக்கு தமிழ்நாடு தரம் கெட்டு போய் கிடக்கிறது. சட்டசபையில் குலுங்க குலுங்க சிரித்தவர்களை பார்த்து, உலகமே சிரிக்கிறது. தமிழக மக்களை கேவலப்படுத்தி விட்டார்கள். தமிழகத்தின் பெயரை சொன்னாலே சிரிக்கிறார்கள். அந்த அளவிற்கு மாற்றி இருக்கிறார்கள்.
மடியில் கணம் இருந்ததால் தான், கடந்த 18 ஆண்டுகளாக, சொத்து குவிப்பு வழக்கை ஜெயலலிதா இழுத்தடித்தார். நீதியை நிலைநாட்டி தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹாவிற்கு, பலரும் நன்றி தெரிவிக்கின்றனர். ஆனால், அவரை அ.தி.மு.கவினர் பன்றியாக சித்தரித்து படம் போட்டு கிண்டலடிக்கின்றனர். ஜெயலலிதா சிறைக்கு சென்றதால் போராட்டம் நடத்துகிறோம் என்கிறார்கள். 1997ம் ஆண்டு ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது அவர்கள் கட்சி தொண்டர்கள் எங்கே போனார்கள்?. இப்போது ஆளுங்கட்சி என்பதால் அதிகாரத்தை பயன்படுத்தி அட்டகாசம் செய்வது ஏன்? பஸ்களை ஏன் நிறுத்துகிறீர்கள். பொது மக்களுக்கு தொந்தரவு கொடுத்து, பொதுவுடமையை சேதப்படுத்தினால் நான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். பெங்களூர் சிறையில் இருந்து ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றக்கூடாது. அப்படி மாற்றினால் திகார், பெல்காம், அந்தமான் சிறைக்கு அவரை மாற்றலாம். மேலும், கிரானைட் உள்ளிட்ட முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்றம் ஏற்படுத்திய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் குழுவை செயல்படுத்த தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்றார் விஜய்காந்த்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment