↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அமெரிக்காவில் வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் 110 மாடி இரட்டை கோபுரத்தின் மீதும் விமானங்களை மோதி கடந்த 2001 செப்டம்பர் 11ந் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 3 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை மூளையாக இருந்து செயல்படுத்தியவர் அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் பின்லேடன்.
இந்த பின்லேடன் பாகிஸ்தானில் அப்போட்டாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்தபோது, கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி, அமெரிக்க ராணுவம் ‘ஆபரேஷன் நெப்டியூன் ஸ்பியர்’ என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை எடுத்து கொன்றது.
பின்னர் பின்லேடன் உடலை 24 மணி நேரத்துக்குள் கடலுக்குள் புதைத்து விட்டதாக கூறப்பட்டது. அவரது  உடலை 300 பவுண்ட் எடையுள்ள இரும்புச்சங்கிலியால் உருவாக்கப்பட்ட பைக்குள் வைத்து நடுக்கடலில் வீசியதாக அமெரிக்க உளவுப்படை சி.ஐ.ஏ.யின் முன்னாள் இயக்குனரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான லியோன் பானட்டா தான் எழுதி உள்ள ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பின்லேடன் உடல் கடலுக்குள் மூழ்கி விட வேண்டும் என்பதற்காகத்தான் 300 பவுண்ட் எடை கொண்ட இரும்புச்சங்கிலியால் தயார் செய்யப்பட்ட பைக்குள் வைத்து போடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top