பேஸ்புக் மூலம் மேற்கொண்டு வந்த காதல் தொடர்பு காரணமாக கேகாலை பிரதேசத்திலுள்ள பிரிவெனா ஒன்றின் பிக்கு ஒருவர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். 22 வயது பிக்கு ஒருவரே இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டவராவார்.
நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான யுவதியொருவருடன் “பேஸ்புக்” மூலம் சில காலமாக இவர் கொண்ட காதல் தொடர்பின் காரணமாக கேகாலையிலுள்ள பிரசித்த பிரிவேனா ஒன்றின் பிக்கு ஒருவர் அடிக்கடி யுவதியை சந்திக்க வந்துள்ளதாகவும் அப்படி வரும் சந்தர்ப்பங்களில் பிக்குகள் அணியும் காவி உடையுடன் வந்துள்ளதாகவும் தெரியவருகிறது .
கடந்த வாரம் ஒரு நாள் யுவதியின் வீட்டுக்கு காவி உடையில் வந்த இந்த பிக்கு தான், பிரிவேனயில் துறவறம் பூண்டுள்ளதாகவும் எங்கள் இருவருக்குமிடையே காதல் தொடர்பு இருக்கின்றது என யுவதியின் பெற்றோரிடம் தெரிந்துள்ளார்.
யுவதியின் பெற்றோர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து இந்த பிக்கு கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான்பூர்ணிமா பரணகமகே முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.
0 comments:
Post a Comment