நான் நடிச்சது நாலைஞ்சு படங்கள்தான். ஆனா, 'பிரமாதமான பெர்ஃபார்மர்’னு பாராட்டுக்கள் குவிஞ்சது. தங்கர் சார், 'நீதான் அடுத்த நந்திதா தாஸ்’னு சொன்னார். அந்தப் பாராட்டுக்கள் தந்த உற்சாகத்துல, 'திமிரு’, 'வெயில்’, 'காஞ்சிவரம்’னு நான் நடிச்ச ஒவ்வொரு படத்துக்கும் ஏதோ ஒரு அவார்டு எதிர்பார்த்தேன். ஆனா, எதுவுமே எனக்குக் கிடைக்கலை. இமேஜ் பார்க்காம வித்தியாசமா நடிக்கணும்னு வந்த ஒரு சின்னப் பொண்ணைக் கண்டுக்கவே ஆள் இல்லை. அதனால நானும் சினிமாவைக் கண்டுக்கலை. ஆனா, இப்ப இந்தப் படத்துல கமிட் ஆனப்போ, எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன்... 'இந்தப் படத்துக்கு மட்டும் அவார்டு கிடைக்கலைன்னா, நீங்க எல்லாருமே காலி...’னு!'' 'டேய்ய்ய்ய்... மாப்ள’ என 'திமிரு’ படத்தில் இழுத்துச் செருகிய பாவாடையுடன் அதட்டல்போடும் அதே தொனியில் பேசுகிறார் ஸ்ரேயா ரெட்டி.
'சேனல் காம்பியர்’, 'சேட்டை நடிகை’ எனப் பல கேரக்டர்களுக்குப் பிறகு, விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை மணந்து செட்டில் ஆனவர், இப்போது 'அண்டாவைக் காணோம்’ படம் மூலம் சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பிக்கிறார். நுங்கம்பாக்கம் 99'F ஜிம்மில் நடந்தது சந்திப்பு.
''இது தேனி, உசிலம்பட்டியைச் சுத்தி நடக்கிற கதை. 'சாந்தி’னு ஒரு சாதாரணப் பொண்ணோட வாழ்க்கை. ஆனா, ஒரு ஹீரோயினுக்கு இப்படி ஒரு சப்ஜெக்ட் ரொம்ப ஸ்பெஷல். டைரக்டர் சுசீந்திரனோட அசோசியேட் வடிவேல்தான் படத்தோட இயக்குநர்.''
''இப்போதைய டிரெண்டுக்கு அடுத்தடுத்து உங்களுக்கு ஹீரோயின் சான்ஸ் கிடைக்கும்னு நம்புறீங்களா?''
''முதல்ல நான் ஒரு ஆக்டர். அப்புறம்தான், ஹீரோயின், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் எல்லாம். 'திமிரு’ல நான் ஒரு புதுமுகம். 'ரீமா சென்தான் ஹீரோயின். நீங்க செகண்டு ஹீரோயின்’னு சொன்னாங்க. 'ஆக்டிங்ல என்ன ஹீரோயின்... செகண்டு ஹீரோயின்’னு எனக்குப் பயங்கரக் கோபம். 'ஸ்பாட்டுக்கு வர்றேன்டி மாப்ளைகளா.. வந்து என்ன ஆக்டிங் கொடுக்குறேன்னு பாருங்க’னு கிளம்பி வந்தேன். படத்துல ஸ்கோர் பண்ணேனா இல்லையா?! அப்படி கேமராவுக்கு முன்னாடி யார் பவர்ஃபுல்லா வர்றாங்களோ, அவங்கதான் அந்த சீனுக்கான ஹீரோ, ஹீரோயின். இந்தப் படம் பிடிச்சுருக்கு; நடிக்கிறேன். இப்படி அடுத்த ஸ்கிரிப்ட் அமைஞ்சாப் பார்த்துக்கலாம்!''
''பார்ட்டி, ஃபங்ஷன்னாலே கிளாமராத்தான் வருவீங்க. ஆனா, கிளாமர் ஹீரோயினா உங்களைப் பார்த்ததே இல்லையே?''
''சினிமால கிளாமர் தப்புனு நான் சொல்லலை. ஆனா, எனக்கு அது சரிவராது. இத்தனைக்கும் ரியல் லைஃப்ல நான் ரொம்பவே கிளாமர். 'ஐயோ ராமா... இந்தப் பொண்ணு ஏன்தான் இப்படி டிரெஸ் பண்ணுதோ’னு விஷால், விக்ரம் எல்லாம் ஜாலியா பதறுவாங்க. ஆனா, அது ரியல் லைஃப்ல மட்டும்தான். டாப் ஸ்டார் ஹீரோயின்களுக்கு என் வயசுதான் இருக்கும். அதனால கிளாமர் பண்றது கஷ்டமே இல்லை. ஆனா, அந்த கேரக்டருக்கு அது அவசியமா இருக்கணும். 'அண்டாவைக் காணோம்’ படத்துல தேனி பொண்ணு கேரக்டர். மேக்கப் இல்லாம, காட்டன் ஸாரி கட்டி நடிச்சேன்.''
''கிட்டத்தட்ட 10 வருஷம் முன்னாடி சேனல் காம்பியரிங் பண்ணப்ப இருந்த மாதிரியே இருக்கீங்களே... ஃபிட்னெஸ் சீக்ரெட் என்ன?''
''ஸ்போர்ட்ஸ் பின்னணி. என் அப்பா பரத் ரெட்டி, கிரிக்கெட் பிளேயர். ஸ்கூல்ல இருந்து காலேஜ் வரை நான் 100 மீட்டர் ஸ்பிரின்டர். டிஸ்கஸ், ஷாட்புட் எல்லாம் விளையாடுவேன். எக்சர்சைஸ் பண்ணாம இருக்க மாட்டேன். டயட்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட். ஏன்னா, எக்சர்சைஸ் வெறும் 20 சதவிகிதம்தான்... மீதி 80 சதவிகிதம் சாப்பாடுதான். மட்டன் சாப்பிட மாட்டேன். சிக்கன், முட்டை வெள்ளைக்கரு, காய்கறி, பழங்கள்... அவ்வளவுதான். பார்ட்டிக்குப் போனா நோ ஆல்கஹால், நோ ஸ்மோக்கிங். ஆனா, என் ஒரே பலவீனம்... சாக்லேட்ஸ். எவ்வளவு கன்ட்ரோலா இருந்தாலும் அப்பப்போ கொஞ்சம் சாப்ட்டுர்றேன்!''
''அட... நம்புற மாதிரி ஏதாச்சும் சொல்லுங்க..! எப்போ பார்த்தாலும் ஆர்யா, விஷால்னு பார்ட்டி பண்ணிட்டே இருக்கீங்க... இந்த டயட் எல்லாம் சான்ஸே இல்லை!''
''அட ராமா... இப்படித்தான் இந்த உலகம் என்னை நம்பவே மாட்டேங்குது. ரொம்ப சின்ன வயசுல இருந்தே, ஆல்கஹால், ஸ்மோக்கிங் பழகக் கூடாதுனு உறுதியா இருந்தேன். அதை இப்போ வரை ஃபாலோ பண்றேன். எனக்கு என் உடம்பு முக்கியம். ஏன்னா, வயசை ஜாஸ்தியாக்கிக் காட்டுறதுல ஆல்கஹால், புகைக்கு பெரிய ரோல் இருக்கு. ஆனால், நல்லா கிளாமரஸா டிரெஸ் பண்ணிட்டு பார்ட்டி ஹாலுக்குப் போவேன். பத்தே நிமிஷம்... அட்டென்டன்ஸ் போட்டுட்டு ஓடி வந்துருவேன். எல்லாருமே கேலி பண்ணுவாங்க... 'பார்ட்டில இருந்து எஸ்கேப் ஆகி, வீட்ல டிரெட்மில்ல ஓடிட்டு இருப்பாங்க’னு!''
''சரி... ஆர்யா, விஷாலுக்கு எல்லாம் பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கக் கூடாதா?''
''இண்டஸ்ட்ரில யார் மென்டல்னு கேட்டீங்கன்னா, அது அவங்க ரெண்டு பேர்தான். ஆர்யாவும் விஷாலும் லூஸுப் பசங்க. சினிமா தவிர வேற எந்த கமிட்மென்ட்டும் வேணாம்னு ஜாலியாத் திரியிறாங்க. ரெண்டு பசங்களும் சேர்ந்து பேச ஆரம்பிச்சா, கூட இருக்கிறவங்க விழுந்து விழுந்து சிரிப்பாங்க. அந்த அளவுக்கு ரெண்டு பேருக்கும் சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் ஜாஸ்தி. விஷால் அம்மா ஆர்யாவை எப்பப் பார்த்தாலும், 'ஏம்பா... எப்பப்பா நீ கல்யாணம் பண்ணிக்கப் போற? நீ கல்யாணம் பண்ண பிறகுதான் என் மகன் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டே இருக்கான்’னு கேட்பாங்க. அதனால அவங்களைப் பார்த்தாலே ஆர்யா ஓடிருவான்!''
''சினிமாவுல யாரு பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்?''
''ஐஸ்வர்யா, சௌந்தர்யா. ஃப்ரெண்ட்ஸ்னு சொல்றதைவிட அக்கா-தங்கச்சினு சொல்லலாம். சின்ன வயசுல இருந்து போயஸ் கார்டன்ல ஒண்ணாவே வளர்ந்தோம். அப்படியே தனுஷ§ம் நட்பு ஆனார். அப்புறம்... ஃப்ரெண்டுங்கிறதைத் தாண்டி என்னைப் பிரமிக்கவைக்கிறவர் த்ரிஷா. என்னைவிட ஒரு இன்ச் உயரம் அதிகம். இப்போ வரை அதே ஃபிட்னெஸ்ல இருக்காங்க. அதுதான் த்ரிஷா ஸ்பெஷல்!''
0 comments:
Post a Comment