↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிவரும் அஜீத்55 படத்தில் நாயகிகளாக நடித்து வரும் அனுஷ்கா மற்றும் த்ரிஷா ஆகியோர்களுக்கு இடையே திடீர் மோதல் வந்ததாகவும், இந்த மோதலை பார்த்து அஜீத்தும் கவுதம் மேனனும் விழுந்து விழுந்து சிரித்ததாகவும் தகவல்கள் வெளிவந்தூள்ளன.

அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடித்து வரும் அஜீத் 55 படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 சதவிகிதம் முடிந்துவிட்டது. இன்னும் கிளைமாக்ஸ் மற்றும் இரண்டு பாடல்கள் மட்டுமே பாக்கி இருக்கும் நிலையில் இந்த படத்தில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஒரு சிறு சண்டை குறித்து கவுதம் மேனன் தற்போது மனம் திறந்து ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

முதலில் இந்த படத்தில் அனுஷ்காவின் கேரக்டரை பிக்ஸ் செய்துவிட்டதாகவும், பின்னர் கதைக்கு தேவைப்பட்ட இன்னொரு கேரக்டரில் நடிக்க த்ரிஷாவை அணுகிய போது, அனுஷ்கா இருக்கும்போது என்னுடைய கேரக்டர் எப்படி இருக்கும் என சந்தேகமாக கேட்டாராம். பின்னர் அரைகுறை மனதுடன் நடிக்க ஒப்புக்கொண்டு படப்பிடிப்புக்கு வந்தபோது அனுஷ்கா மற்றும் த்ரிஷா ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பில் சந்திக்கும் நிலை ஒரு நாள் வந்தது.

அப்போது த்ரிஷா இந்த படத்தின் கேரக்டர் குறித்து தனக்கு திருப்தி இல்லை என்று அனுஷ்காவிடம் கூறியதாகவும் உடனடியாக அனுஷ்கா, தான் நடிக்கும் கேரக்டரை த்ரிஷாவுக்கு விட்டுக்கொடுக்க முன்வந்ததாகவும் கூறப்படுகிறது. 'என்னுடைய கேரக்டரில் நீங்கள் நடியுங்கள், உங்களுடைய கேரக்டரில் நான் நடிக்கின்றேன். எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என தாராள மனதுடன் அனுஷ்கா முன்வந்ததாகவும், ஆனால் அனுஷ்காவின் நல்ல எண்ணத்தை புரிந்து கொண்ட த்ரிஷா 'வேண்டாம் வேண்டாம் எனக்கு கவுதம் கொடுத்த கேரக்டரிலேயே நான் நடிக்கின்றேன்' என்று த்ரிஷா கூறியதாகவும் தெரிகிறது. இவர்கள் இருவரது செல்லமான சண்டையை பார்த்து கவுதம் மேனனும் அஜீத்தும் சிரித்துக்கொண்டனர். 

ஒரு படத்தில் நடிக்கும் இரண்டு ஹீரோயின்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து ஒரு புரிதல் மனப்பக்குவத்துடன் நடித்தது குறித்து அஜீத்தும் கவுதம் மேனனும் பெருமையாக பேசிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top